கள்ளச்சாராய விற்பனையை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் சிக்கிம் மாநிலம் உதய தினம் கொண்டாடப்பட்டது. துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம், ஜிப்மர் மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் படிக்கும் சிக்கீம் மற்றும் பல்வேறு மாநிலங்களை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மரக்காணத்தில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்க சம்பவம். இச்சம்பவம் ஒரு கரும்புள்ளி. உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கும்போது துயரத்தை தாங்காமல் இருக்க முடியவில்லை. கள்ளச்சாரயம் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். கள்ளச்சாரயம் தயாரிப்பவர்கள் உடம்பிற்கு கேடு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
undefined
Crime News: பள்ளிப்பருவ காதலால் பொதுத்தேர்வு எழுதிய மாணவன் தலை துண்டித்து கொடூர கொலை
கள்ளச்சாரயம் அருந்தி உயிர் வாழ்ந்தால் கூட கண் பார்வை போய் விடும். சிறிது நேர போதைக்காக வாழ்க்கையை இழக்க வேண்டுமா என்பதை கள்ளச்சாராயம் அருந்துபவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். விஷ சாராயம் அருந்தியவரக்ளுக்கு உயர்தர சிகிச்சை அளித்தும் அவர்களது உயிரை காப்பற்ற முடியாதது மிகவும் வருத்தமான ஒன்று. எனவே கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
கள்ளச்சாரயம் அருந்துபவர்கள் தவறான பாதைக்கு செல்ல வேண்டாம். புதுச்சேரியில் போதைப்பெருள் மற்றும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து சென்றது, அங்கிருந்து சென்றது என கூறி கள்ளச்சாராய விவகாரத்தில் பொறுப்பை தட்டிக்கழிப்பதை தவிர்த்து எந்த பகுதியில் இருந்து வந்தாலும் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயம் வந்ததக கூறி சில பொறுப்புகள் எங்களுக்கு இல்லை என எந்த பகுதியை சார்ந்தவர்களும் சொல்லி விட முடியாது என்றார்.