16 மாவட்ட ஆட்சியர்கள் பணியிடமாற்றம்... தமிழக அரசு அதிரடி!!

Published : May 16, 2023, 10:38 PM ISTUpdated : May 17, 2023, 10:29 AM IST
16 மாவட்ட ஆட்சியர்கள் பணியிடமாற்றம்... தமிழக அரசு அதிரடி!!

சுருக்கம்

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். 

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த அருண் தம்புராஜ், கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த தீபக் ஜேக்கப், தஞ்சை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகவும்,  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் நாகை மாவட்ட ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வணிக வரித்துறை நிர்வாகம் இணை ஆணையராக இருந்த சங்கீதா மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: கள்ளசாராய விற்பனையை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - ஆளுநர் தமிழிசை கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாக இணை ஆணையராக இருந்த விஷ்ணு சந்திரன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குனர் ராஜ கோபால் சுங்கரா, ஈரோடு மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த கிறிஸ்துராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: கள்ளச்சாராய விவகாரம் எதிரொலி: டாஸ்மாக் இயக்குநர் உள்பட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழ்நாடு பால் உற்பத்திக் கழக நிர்வாக இணை இயக்குனர் சரயு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக எம்.என்.பூங்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆஷா அஜித் நியமிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியராக ஆனிமேரி ஸ்வர்னா,  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக உமா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக கலைச்செல்வி மோகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 06 December 2025: இன்று முதல் ஆறு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
இந்த ஐந்து நாள் பயிற்சி போய்ட்டு வந்தாலே போதும்! கை நிறைய சம்பாதிக்கலாம்! உங்க லைஃப் டோட்டலா மாறிடும்!