கவனத்திற்கு !! காலாண்டு விடுமுறை முடிந்து அனைத்து மெட்ரிக் பள்ளிகளும் எப்போது திறப்பு..? புது உத்தரவு..

By Thanalakshmi VFirst Published Oct 5, 2022, 11:54 AM IST
Highlights

தமிழகத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகளும் காலாண்டு விடுமுறை முடிந்து அக்.10 ஆம் தேதி பள்ளிகள் திறக்க வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
 

தமிழகத்தில் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டிபாட்டில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அக்.10 ஆம் தேதியும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அக்.13 ஆம் தேதியும் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் கடந்த செப்டம்பர்  மாதம் 30ம் தேதி காலாண்டுத் தேர்வு முடிவடைந்தது. இதனையடுத்து அக். 1 முதல் 5ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு, அக்.6-ல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

மேலும் படிக்க:திருவெறும்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பால்கடைக்காரர்

இந்நிலையில் கடந்த கோடை விடுமுறையின் போது எண்ணும் எழுத்துப் பயிற்சித் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், அதற்கு ஈடுசெய்யும் வகையில் தற்போது பணி விடுப்பு வழங்குமாறு தொடர் கோரிக்கையை வைத்தனர். 

மேலும் எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட பயிற்சிகளை கருதில் கொண்டும் பள்ளி மற்றும் தொடக்கக் கல்வியின் கட்டுப்பாட்டில் உள்ள 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு அக்டோபர் 13 அன்று பள்ளிகள் திறக்கும் என்று புதிய அறிவிப்பு வெளியானது. 

மேலும் படிக்க:தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. 15 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை அப்டேட்

இந்நிலையில், தற்போது அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் காலாண்டு விடுமுறை முடிந்து வரும் அக்.10 ஆம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும் என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

click me!