திருமண விழாவில் விநோதம்... மணமக்களின் நூதன விருந்து

By vinoth kumarFirst Published Nov 14, 2018, 3:19 PM IST
Highlights

திருமண விழாவுக்கு வந்தவர்களுக்கு மண மேடையில் இருந்த மாப்பிள்ளை, மணப்பெண் இருவரும் நிலவேம்பு கசாயம் கொடுத்து விருந்து அளித்தனர். இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

திருமண விழாவுக்கு வந்தவர்களுக்கு மண மேடையில் இருந்த மாப்பிள்ளை, மணப்பெண் இருவரும் நிலவேம்பு கசாயம் கொடுத்து விருந்து அளித்தனர். இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

தற்போது டெங்கு, பன்றி காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காய்ச்சலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதேபோல் அனைத்து கட்சியினரும், நிலவேம்பு கசாயம்  வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில் புதுச்சேரியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு டீ, காப்பிக்கு பதிலாக நிலவேம்பு கசாயத்தை மணமக்கள் வழங்கினர். புதுச்சேரி அடுத்த ஆரோவில் அருகே சஞ்சீவி நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இசை கலைஞர். இவருக்கும், சென்னையை சேர்ந்த பட்டதாரி பெண்ணான கீர்த்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 

இவர்களது திருமணம் இன்று காலை திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமண விழாவில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மூகூர்த்த நேரத்தில் தாலி கட்டும் நிகழ்ச்சி முடிந்ததும் மணமக்கள் மண்டப வாயிலில் நின்று விழாவில் பங்கேற்றவர்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினர். அதனை அனைவரும் மறுக்காமல் வாங்கி பருகியதோடு மணமக்களை வாழ்த்தி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

click me!