தொடர் விடுப்பு மற்றும் இரவு பணியை புறக்கணித்த 3 சிறை காவலர்கள் அடுத்தடுத்து டிஸ்மிஸ் செய்து சிறை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
காவலர்களுக்கு விடுப்பு
24 மணி நேரமும் பணி செய்து வரும் காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்க வேண்டும் என்பத காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது இதையடுத்து காவலர்கள் முதல் தலைமை காவலர் வரை வாரத்தில் ஒரு நாள் விடுப்பு குறித்த அரசாணையை தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது. மேலும் காவல் நிலைய பணி மற்றும் சூழலை பொறுத்து விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. வார விடுப்பு எடுக்கும் காவலர்களின் பெயர்கள் விவரங்கள் காவல் நிலைய நோட்டீஸ் போர்டில் குறிப்பிட வேண்டும் என்றும் அந்த காவலருக்கு பதிலாக மாற்று காவலர் பணியில் அமர்த்துவதற்கு எதுவாக இருக்கும் என டிஜிபி தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் தொடர் விடுமறை மற்றும் இரவு பணியை புறக்கணித்த 3 சிறைக்காவலர்களை அதிரடியாக டிஸ்மிஸ் செய்து சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.காவலர்களுக்கு வேலை பளு காரணமாக மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காவலர்களுக்கு தேவையான அவசர விடுப்பு வழங்க வேண்டும் என டிஜிபி கூறியிருந்தார்.
3 காவலர்கள் டிஸ்மிஸ்
இந்தநிலையில் மதுரை மத்திய சிறையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்த முனீஸ்வரன் என்பவர் தொடர் விடுப்பு எடுத்தும், தொடர்ந்து பலமுறை இரவு காவல் பணியை புறக்கணித்த வந்தாக கூறப்படுகிறது. மேலும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கமும் கேட்கப்பட்டதாக தெரிகிறது இந்தநிலையில் முனீஸ்வரனை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று கொடைக்கானல் கிளைச்சிறையில் இரண்டாம் நிலை காவலரான ஆனந்த என்பவரையும் கடந்த வாரம் மதுரை மத்திய சிறை நிர்வாகம் பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் நேற்று மதுரை மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட சிறையில் முதல் நிலை காவலராக இருந்து வரும் மாதர் சிக்கந்தர் என்பவர் தொடர் விடுப்பில் இருந்ததால் அவரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரே வாரத்தில் மதுரை ,கொடைக்கானல் ராமநாதபுரம் ஆகிய சிறையில் பணியாற்றிய மூன்று காவலர்களை பணிநீக்கம் செய்து மதுரை மத்திய சிறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
திறக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம்..! ஜெயலலிதாவின் பரிசு பொருட்கள் திருட்டா..? உண்மை நிலவரம் என்ன..?