வாங்கிய கடனை கட்டல…. மதுவந்தி வீட்டை சீல் வைத்த அதிகாரிகள்..

By manimegalai aFirst Published Oct 14, 2021, 8:23 AM IST
Highlights

கடனை திருப்பி செலுத்தாததால் பாஜக செயற்குழு உறுப்பினரும்,  ஒய்ஜி மதுவந்தியின் வீட்டை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

சென்னை: கடனை திருப்பி செலுத்தாததால் பாஜக செயற்குழு உறுப்பினரும்,  ஒய்ஜி மதுவந்தியின் வீட்டை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

பாஜக செயற்குழு உறுப்பினராக இருப்பவர் ஒய்ஜி மகேந்திரனின் மகன் ஒய்ஜி மதுவந்தி. இவர் சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2வது குறுக்கு தெருவில் வசித்து வருகிறார்.

2016ம் ஆண்டு இந்துஜா பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதன் பின்னர் வீட்டுக்கான கடன் தொகையை சில மாதம் கட்டிய அவர் மதுவந்தி பணம் கட்டாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பணம் செலுத்துமாறு நிதி நிறுவனத்தினர் மதுவந்தியிடன் வலியுறுத்தி வந்துள்ளனர்.

ஆனால் பணம் கட்டாமல் அவர் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அதிகாரிகள் அசல், வட்டி 1 கோடியே 21 லட்சத்து 30 ஆயிரத்து 867 ரூபாயை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர். அப்படியும் மதுவந்தி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந் நிலையில் கோர்ட்டில் பைனான்ஸ் நிறுவனம் வழக்கு தொடர, மதுவந்தி வீட்டுக்கு சீல் வைத்து இந்துஜா பைனான்சிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் மதுவந்தி வீடு சீல் வைக்கப்பட்டு அதன் சாவி இந்துஜா பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

click me!