மதுராந்தகம் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து.. 6 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு.!

By vinoth kumarFirst Published Jul 8, 2022, 9:33 AM IST
Highlights

மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. 

இதையும் படிங்க;- பிரபல ஹோட்டல் சாப்பாட்டில் பேண்டேஜ்.. அலட்சியம் காட்டிய ஊழியர்கள்.. உரிமையாளர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

இந்த விபத்தில் 2 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்ததனர். மேலும், 10 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பேருந்து அதிவேகமாக இயக்கியதே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தால் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதையும் படிங்க;-  குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி... தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு மூடல்...!

click me!