OMICRON:தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு..? இன்னும் 4 நாட்களில் தெரிந்துவிடும். - அமைச்சர் மா.சு

By Thanalakshmi VFirst Published Dec 3, 2021, 9:17 PM IST
Highlights

’ஹை ரிஸ்க்’ நாடுகளிலிருந்து வந்தவர்களில் 3 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவரது மாதிரிகள் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால் என்பதை அறிந்துகொள்ள மரபியல் பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் தெரியவரும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
 

வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ள நிலையில், கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வருபவர்களுக்கும் விமான நிலையங்களில் கொரோனா உறுதியாவது தொடர்பாக சுகாதாரத்துறை துறை செயலர் விளக்கமளித்துள்ளார். லண்டன் இருந்து சென்னை விமானநிலையம் வந்த 2 பேர், சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த இருவர் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பாதித்த 3 பேருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய அவர்களின் மாதிரிகள், மரபியல் பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பட்டுள்ளதாகவும்,  அதன் முடிவுகள் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் தெரியும் என்றும் குறிப்பிட்டுருந்தார். மேலும் ஒமைக்ரான் பாதித்த ’ஹை ரிஸ்க்’ நாடுகளிலிருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தபடுவதாகவும் அமைச்சர் கூறினார்.  குறிப்பாக, விமான நிலையங்களில் தொற்று உறுதியான 3 பேரும், தங்கள் பயணிப்பதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு, பரிசோதனை மேற்கொண்டவர்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் அவர், ஆர்டிபிசிஆர் முடிவுகள் சில சமயங்களில் குறிப்பிட்ட சில மணி நேர இடைவெளிக்கு பிறகு மாறி வருவது இயல்பானது தான் என தெரிவித்தார்.

புதிய வகை ‘ஒமைக்ரான்’தொற்று தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட நிலையில் தொடர்ந்து 20 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. அண்மையில் தென்னாபிரிக்காவில் இருந்து பெங்களுருக்கு வந்த இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக சுகாதாரத்துறை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில், தமிழக எல்லையில் தீவர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் குறிப்பிட்ட ஆபத்தான பட்டியலில் இருந்து வரும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபடுகிறது. மேலும் வெளிநாடுகளிலிந்து வரும் பயணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டு, முடிவுகள் தெரியும் வரை அவர்கள் தங்குவதற்கான வசதிகளும் ஏற்படுத்தபட்டுள்ளது. மேலும் சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒமைக்ரான் தொற்று பாதித்தால் , சிகிச்சை மேற்கொள்ள தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

அண்மையில் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்தல், கொரோனா தடுப்பூசி செல்லுத்துவதை ஊக்குவித்தல், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்தல், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணித்தல் போன்றவை குறிப்பிடப்பட்டிருந்தது.

click me!