OMICRON: இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று - தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

By Thanalakshmi VFirst Published Dec 3, 2021, 7:58 PM IST
Highlights

கர்நாடகத்தில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில், தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளபட்டு வருகிறது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கர்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்குப் பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. 
 

புதிய வகை ‘ஒமைக்ரான்’தொற்று தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட நிலையில் தொடர்ந்து 20 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. அண்மையில் தென்னாபிரிக்காவில் இருந்து பெங்களுருக்கு வந்த இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக சுகாதாரத்துறை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில், தமிழக எல்லையில் தீவர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக- கர்நாடக எல்லைகளில் தீவர மருத்துவ கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. முழு பரிசோதனைக்கு பின்னர், கொரோனா முடிவுகள் தெரிந்த பின்னரே எல்லைகளில் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இரு மாநில எல்லையான சூசூவாடியில் நல்வாழ்வுதுறை, காவல்துறை, வருவாய்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், கர்நாடகத்தில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றைச் சோதித்து வருகின்றனர். வாகனங்களை நிறுத்திப் பரிசோதித்து அனுமதிக்க நேரமாவதால் எல்லை பகுதியில் வாகனங்கள் நெடுந்தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. மேலும் தமிழகத்தின் அனைத்து எல்லைகளிலும் தீவர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் அண்மையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளியில் நடமாட தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். மேலும் வணிக வளாகங்கள், தியேட்டர்கள், நியாயவிலை கடை, சூப்பர் மார்க்கேட், மதுப்பான கடை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவித்திருந்தார்.

புதிதாக உருமாறியுள்ள ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் குறிப்பிட்ட ஆபத்தான பட்டியலில் இருந்து வரும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபடுகிறது. மேலும் வெளிநாடுகளிலிந்து வரும் பயணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டு, முடிவுகள் தெரியும் வரை அவர்கள் தங்குவதற்கான வசதிகளும் ஏற்படுத்தபட்டுள்ளது.

மேலும் சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒமைக்ரான் தொற்று பாதித்தால் , சிகிச்சை மேற்கொள்ள தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் படி , சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனை, ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை, நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் ஒமைக்ரான் சிறப்பு தனி வார்டுகள் அமைக்கபட்டுள்ளன.    

அண்மையில் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்தல், கொரோனா தடுப்பூசி செல்லுத்துவதை ஊக்குவித்தல், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்தல், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணித்தல் போன்றவை குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதனையடுத்து, தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினர். அந்த அலோசனை கூட்டத்தில், தடுப்பூசி செலுத்துதல், முககவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பேசினார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்த பேட்டியில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கட்டுபாடுகள் விதித்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!