OMICRON: இனி "Vaccine" கட்டாயம்..! மாவட்ட வாரியாக தொடரும் "LOCKDOWN"

Published : Dec 03, 2021, 07:10 PM ISTUpdated : Dec 03, 2021, 07:20 PM IST
OMICRON: இனி "Vaccine" கட்டாயம்..! மாவட்ட வாரியாக தொடரும் "LOCKDOWN"

சுருக்கம்

கிருஷ்ணகிரி, வேலூர் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.  

புதிதாக உருமாறியுள்ள ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் குறிப்பிட்ட ஆபத்தான பட்டியலில் இருந்து வரும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபடுகிறது. மேலும் வெளிநாடுகளிலிந்து வரும் பயணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டு, முடிவுகள் தெரியும் வரை அவர்கள் தங்குவதற்கான வசதிகளும் ஏற்படுத்தபட்டுள்ளது.

மேலும் சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒமைக்ரான் தொற்று பாதித்தால் , சிகிச்சை மேற்கொள்ள தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் படி , சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனை, ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை, நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் ஒமைக்ரான் சிறப்பு தனி வார்டுகள் அமைக்கபட்டுள்ளன.    

அண்மையில் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்தல், கொரோனா தடுப்பூசி செல்லுத்துவதை ஊக்குவித்தல், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்தல், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணித்தல் போன்றவை குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினர். அந்த அலோசனை கூட்டத்தில், தடுப்பூசி செலுத்துதல், முககவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பேசினார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்த பேட்டியில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கட்டுபாடுகள் விதித்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார் 

இதனால், தடுப்பூசி குறைந்த சதவீதம் மட்டுமே செலுத்தி உள்ள மாவட்டங்களில் ஆட்சியர்கள் அதிரடி கட்டுபாடுகள் விதித்து வருகின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி, வேலூர் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் நியாய விலைக்கடை, வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், திரையரங்கம், திருமண மண்டபம், கடைவீதிகள், துணிக்கடைகள், வங்கிகள் உள்ளிட்ட 18 இடங்களில் செல்லத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். 

டாஸ்மாக் கடைக்கு மது வாங்க செல்பவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் எனவும் தடுப்பூசி செலுத்தியவர்கள் தங்களுக்கு வந்த குறுந்தகவலை காட்டி பொது இடங்களுக்குச் செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார்

மதுரை மாவட்டம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மோசமான நிலையில் உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் நேற்று தெரிவித்த நிலையில் ஆட்சியர் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுவரை மதுரை மாவட்டத்தில் முதல் தவணை 71 சதவீதம் பேரும், 2ஆம் தவணை 32 சதவீதம் பேர் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனர். ஏற்கெனவே கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மதுரை மாவட்டமும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

TVK VIJAY MOVE: ஆளுநர் மூலம் ஆட்டத்தை தொடங்கிய டெல்லி.! விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதிக்கும் எதிர்க்கட்சிகள்.! இதுதான் தமிழகம்.!
TVK - AIADMK: தவெகவுக்கு ஆதரவா? சி.வி.சண்முகம் கன்ட்ரோலில் 40 எம்எல்ஏக்கள்? அதிமுக - திமுக கூட்டணியா?