தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவராக இரண்டாவது முறையாக தமிழகத்தைச் சார்ந்த ம.வெங்கடேசன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்திய அரசின் சட்டபூர்வமான அமைப்பான தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
1992 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் தேசிய மகளிர் ஆணையம், மகளிர் நலன் தொடர்பான கொள்கைகளை உருவாக்கி, அவற்றை இந்திய அரசுக்கு பரிந்துரைக்கும் அமைப்பு ஆகும். தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக குஷ்பு சுந்தர் நியமிக்கப்பட்டதற்கு ட்விட்டரில் பதிவிட்ட அவர், “அனைவருக்கும் குறிப்பாக பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கு நன்றி” தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.
நடிகை குஷ்புவிற்கு வாழ்த்து தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பெண்கள் உரிமைக்காக அவரின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம் இது" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்
அதேபோல தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவராக இரண்டாவது முறையாக தமிழகத்தைச் சார்ந்த ம.வெங்கடேசன் நியமிக்கப்பட்டு உள்ளார். பாஜக தேசியப் பொதுக்குழு உறுப்பினராக இருக்கும் மா.வெங்கடேசன், பாஜக எஸ்.சி. அணி மாநிலத் தலைவராக இருந்தவர். மேலும், எழுத்தாளரான இவர், இந்துத்துவ அம்பேத்கர், எம்ஜிஆர் என்கிற இந்து, அம்பேத்கர் புத்தம் மதம் மாறியது ஏன் ?, தலித்களுக்கு பாடுபட்டதா நீதிக் கட்சி?, பெரியாரின் மறுபக்கம் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க..உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை ஓரமா போயி விளையாடுங்க.. குறுக்க வராதிங்கப்பா.! கலாய்த்த சீமான்