சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார் வி.லட்சுமிநாராயணன் !!

Published : Feb 27, 2023, 05:57 PM ISTUpdated : Feb 27, 2023, 06:01 PM IST
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார் வி.லட்சுமிநாராயணன் !!

சுருக்கம்

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வி.லட்சுமிநாராயணன் பதவியேற்றார்.

கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது.

அதன்படி விக்டோரியா கவுரி, லட்சுமி நாராயணன், பாலாஜி, ராமசாமி நீல கண்டன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய 5 வழக்கறிஞர்களையும், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய மூன்று மாவட்ட நீதிபதிகளையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்தது.

அதில் வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகள் கலைமதி, திலகவதி ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு  உத்தரவிட்டார். குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, கடந்த 7 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்றுக்கொண்டனர்.

இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக வி.லட்சுமிநாராயணன் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை ஓரமா போயி விளையாடுங்க.. குறுக்க வராதிங்கப்பா.! கலாய்த்த சீமான்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!