ஜெமினி பாலம் தடுப்பை உடைத்துகொண்டு கார்கள் மீது விழுந்த லாரி

 
Published : Nov 09, 2016, 03:43 AM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
ஜெமினி பாலம் தடுப்பை உடைத்துகொண்டு கார்கள் மீது விழுந்த லாரி

சுருக்கம்

சென்னை அண்ணா சாலை ஜெமினி மேம்பால தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு பாலத்தின் மீதிருந்து தலைக்குப்புற கவிழ்ந்ததில் அங்கிருந்த கார்கள் மீது விழுந்து நொறுங்கியது.

சென்னை அண்ணா சாலையில் ஆயிரம் விளக்கில் ஜெமினி மேம்பாலம் உள்ளது. இங்கு நேற்றிரவு சுமார் 1 மணி அளவில் சைதாப்பேட்டையிலிருந்து பாரிமுனை நோக்கி லாரி ஒன்று வேகமாக வந்தது. லாரியை டிரைவர் மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்தார். 

ஜெமினி மேம்பாலத்தில் ஏறும்போது டிரைவர் மணிகண்டன் தூக்ககலக்கத்தில் கண்ணயர்ந்ததால் லாரி அவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டு சுவரை உடைத்துகொண்டு மேலிருந்து தலைக்குப்புற கீழே சாலையில் விழுந்தது.

இதில் கீழே நின்றிருந்த டாட்டா ஏஸ் குட்டியானை வாகனங்கள் மீது விழுந்து நொறுங்கியது. அதிர்ஸ்ட வசமாக கீழே யாரும் இல்லாததால் உயிர்சேதன் எதுவும் இல்லை. லாரி ஓட்டுனர் மணிகண்டனுக்கு லேசாக காயம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் சம்பபவ இடத்திற்கு வந்தனர். கிரேன் கொண்டுவரப்பட்டு லாரி தூக்கி நிறுத்தப்பட்டது. 

லாரி டிரைவர் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். உடைந்த ஜெமினி பால பக்க சுவர் சீரமைக்கப்பட்டு வருகிறது.

PREV
click me!

Recommended Stories

டிசம்பர் மாதத்தில் மழை எப்படி இருக்கும்? அடுத்தடுத்து உருவாகும் புயல்? டெல்டா வெதர்மேன் முக்கிய தகவல்
விஜய் வீட்டில் ராகுலில் முகமூடி பிரவீன்..! திமுகவை வெறுப்பேற்றும் காங்கிரஸ்..! தவெகவை வைத்து ஆடுபுலி ஆட்டம்..!