
பெங்களுரு அருகே திப்பகொண்டஹள்ளி நீர்தேக்கத்தில் சினிமா ஷுட்டிங்கின்போது விபரீதம். சினிமா சூட்டிங்கிற்காக ஹெலிகாப்டரில் இருந்து குதித்த ஸ்டண்ட் நடிகர்கள் பலியானார்கள். அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஸ்டண்ட் நடிகர்கள் 2 பேரும், ஹீரோவும் விழுந்ததில் ஹீரோ தப்பிவிட்டார், ஸ்டண்ட் நடிகர்கள் மரணமடைந்தனர்.
மஸ்தி குடி என்ற கன்னட படத்திற்கான படப்பிடிப்பு நேற்று முன்தினம் திப்பகோண்டனஹள்ளி ஆற்றில் நடந்தது. இதில், ஹீரோ துனியா விஜய் மற்றும் ஸ்டண்ட் நடிகர்கள் அனில் மற்றும் உதய் ஆகியோர் ஹெலிகாப்டரில் சண்டை போட்டபடி ஏரியில் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.
அப்போது, இந்த காட்சியில் 3 பேரும் திட்டமிட்டபடி, ஹெலிகாப்டரில் இருந்து குதித்தனர். ஆனால் ஏரியில் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால், 3 பேரும் நீரில் மூழ்கினர். ஆனால் ஹீரோ துனியா விஜய் மட்டும் காப்பாற்றப்பட்டார். ஸ்டண்ட் நடிகர்கள் தண்ணீரில் மூழ்கினர். நீண்ட நேரம் தேடியும், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் முதல் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உதவியுடன் இன்று அதிகாலை முதல் தண்ணீரில் மூழ்கிய 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். தண்ணீரில் மூழ்கிய 2 பேரும் இறந்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார், படப்பிடிப்பின்போது, அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.