
சென்னை தேனாம்பேட்டையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கலந்து கொண்ட விழாவில் அனுமதியின்றி யானையை பயன் படுத்தியதாக விலங்குகள் நல அமைப்பு யானையை பறிமுதல் செய்தது.
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த விழாவுக்காக வரவேற்பு என்ற பெயரில் யானை ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தனர். கோவில் விழா என்று கூறி சிறிது தூரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் அமைச்சர் விழாவுக்காக வரவழைக்கப்பட்டு காமராஜர் அரங்கில் படிகட்டுகள் மீது ஏற்றி நிறுத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல அமைப்புக்கு புகார் அனுப்பபட்டது. புகாரின் பேரில் காமராஜர் அரங்கம் வந்த விலங்குகள் நல அமைப்பு யானையை பறிமுதல் செய்து வேப்பேரியில் உள்ள அலுவலகத்துக்கு கொண்டு சென்றது.
பின்னர் இன்று யானையின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டு நடமாடும் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.