தூத்துக்குடியில் ஆறு வயது சிறுமியிடம் லாரி ஓட்டுநர் அத்துமீறியதால் அச்சிறுமி அலறியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடியதால் சிறுமியை விட்டுவிட்டு ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் ஆறு வயது சிறுமியிடம் லாரி ஓட்டுநர் அத்துமீறியதால் அச்சிறுமி அலறியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடியதால் சிறுமியை விட்டுவிட்டு ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர், தெற்குச் சிந்தலக்கட்டை காலனியில் வசிப்பவர் எட்வர்ட் ராஜ். இவரது மகன் கனி ராஜ் (22). லாரி ஓட்டுநரான இவர் நேற்று இதேப் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அங்கு வீட்டுக்குள் இருந்து சிறுமி அலறும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதறிப்போன பக்கத்து வீட்டார்கள் என்னவென்று பார்க்க வீட்டுக்குள் சென்றுள்ளனர். அங்கு கனி ராஜ், வீட்டில் இருந்த ஆறு வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது தெரிந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், கனிராஜிடம் இருந்து சிறுமியை மீட்டு அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினர். பின்னர், சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையில் கனி ராஜ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
சிறுமிக்கு நடந்தை பெற்றோரிடம் கூறிய அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கும்படி அறிவுறுத்தினர். அதபடியே சிறுமியின் பெற்றோரும் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று கனி ராஜ் மீது புகார் கொடுத்தனர்.
அதன்படி, வழக்குப்பதிந்த காவலாளர்கள் தலைமறையான கனி ராஜை தீவிரமாகத் தேடி வருகின்றனர். சிறுமியையும் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவருக்குத் தேவையான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
ஆறு வயது சிறுமியிடம் உறவினரே தவறாக நடந்துகொண்ட சம்பவ இந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.