நெருங்கும் மக்களவை தேர்தல்.. தமிழகத்திற்கு புதிய மாநில தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஜோதி நிர்மலாசாமி?

By Ansgar RFirst Published Mar 11, 2024, 7:16 PM IST
Highlights

Jothi Nirmalasamy : மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தின் மாநில தலைமை தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டு விஷயங்களில் மும்முரம் காட்டி வருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தின் மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வந்த பழனி குமார் ஓய்வு பெற்றுள்ளார். 

அதனையடுத்து பத்திரப்பதிவு துறை செயலாளராக பணியாற்றி வந்த ஜோதி நிர்மலா சாமி அவர்கள் தற்பொழுது தமிழக மாநில தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அரசனை வெளியாகியுள்ளது.

Latest Videos

பாஜகவின் வெற்றிக்கு அணில் போல உதவியாக இருப்போம்; கூட்டணியை உறுதி செய்தார் டிடிவி தினகரன்

யார் இந்த ஜோதி நிர்மலாசாமி?

ஏற்கனவே பல்வேறு அரசு பதவிகளில் பணிபுரிந்து வந்தவர் தான் ஜோதி நிர்மலாசாமி. இன்னும் இரண்டு மாதங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில், தற்பொழுது நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக மாநில தேர்தல் ஆணையராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை செயலாளராகவும் அவர் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. 

அதே போல முன்னதாக ஜோதி நிர்மலாசாமி அவர்கள் தமிழ்நாட்டினுடைய மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இன்னும் இரண்டு மாதங்களில் அவர் ஓய்வு பெற உள்ள நிலையில் அவருக்கு இந்த மாநில தேர்தல் ஆணையர் பதவி வழங்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

யார் தற்குறி? ஆளுநர் ரவிக்கு திமுக தகவல்தொழில்நுட்ப அணி பதிலடி!

click me!