தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திமுக தகவல்தொழில்நுட்ப அணி கடுமையாக விமர்சித்துள்ளது
சென்னை கிண்டியில் நடந்த பாரத பண்பாடு புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஆங்கிலேயர்கள் சென்ற பிறகும் கூட பிரிவினையை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. தமிழகத்தின் உண்மையான கலாச்சாரம், அடையாளத்தை அழிக்க நிறைய பேர் துடிக்கிறார்கள் என்று பேசினார்.
இந்த நிலையில், தமிழ் மக்களின் கலாசாரம் மற்றும் அடையாளத்தை அழிக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக விமர்சித்த ஆளுநர் ரவிக்கு திமுக தகவல் தொழில்நுட்ப அணி பதிலடி கொடுத்துள்ளது.
இதுகுறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் பக்கத்தில், “தஞ்சாவூர் நாட்டியாஞ்சலியை நிறுத்தியது ஒன்றிய தொல்லியல்துறைதான் என்பது கூட தெரியாமல் அரவேக்காட்டுத்தனமாக உளறும் ஆளுநரே கேள், சமஸ்கிருதத்திற்கு மட்டும் நிதியை ஒதுக்கியும், இந்தி மொழியை மட்டுமே ஒன்றிய வேலைவாய்ப்புகளில் திணித்து தமிழ்நாட்டையும், தமிழர்களையும் வஞ்சிப்பது யார்?
திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியும், வள்ளலார், வைகுண்டர் போன்ற சமத்துவவாதிகளை சனாதனவாதிகளாக சித்தரிப்பதன் மூலம் அவமதிப்பது யார்? கீழடி நாகரீகத்தை தமிழர் நாகரீகம் என்று அழைத்தபோது பாரத நாகரீகம் என்று எகத்தாளம் பேசியது யார்?
தஞ்சாவூர் நாட்டியாஞ்சலியை நிறுத்தியது ஒன்றிய தொல்லியல்துறைதான் என்பது கூட தெரியாமல் அரவேக்காட்டுத்தனமாக உளறும் ஆளுநரே கேள்,
சமஸ்கிருதத்திற்கு மட்டும் நிதியை ஒதுக்கியும், இந்தி மொழியை மட்டுமே ஒன்றிய வேலைவாய்ப்புகளில் திணித்து தமிழ்நாட்டையும், தமிழர்களையும் வஞ்சிப்பது யார்?… pic.twitter.com/PjqGG17q1o
இந்தி மொழி திணிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது ஏதோ இந்தியாவிற்கும், இந்தி பேசும் அனைவருக்கும் எதிரி போல தமிழர்களை சித்தரிப்பது யார்? தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து எழுந்து ஓடியது யார்?
தமிழ்நாட்டு மக்கள் புலம்பெயர் தொழிலாளர்களைத் தாக்குவதாக பொய்களை பரப்பி தமிழ்நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சித்தது யார்? பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக அளவிலும் குறிப்பாக குஜராத் வழியாக போதைப் பொருட்கள் இந்தியாவில் புழங்கும்போது தமிழ்நாட்டின் மீது பழிச் சுமத்தி தமிழ்நாட்டை அவமதிப்பது யார்? தமிழ்நாடு என்று சொல்லாமல் தமிழகம் என்றுதான் சொல்லுவேன் என்ற தற்குறி யார்??” என பதிவிட்டு ஆளுநர் மாளிகையை டேக் செய்துள்ளது.
பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை: பிரேமலதா திட்டவட்டம்!
தமிழக ஆளுநர் ரவி, ஆளும் திமுக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார், நிர்வாக ரீதியிலான மோதல் போக்குகளை தவிர, திமுகவையும் அதன் கொள்கைகளையும் நேரடியாக கடுமையாக சாடி வருகிறார். அண்மையில், அய்யா வைகுண்டரின் 192ஆவது அவதார தின விழா மற்றும் வைகுண்டசுவாமி அருளிய சனாதான வரலாற்று புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆளுநர் ரவி, .யு.போப், கால்டுவெல் பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காதவர்கள் எனவும், திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது எனவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.