Loksabha Election 2024 : திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி துவங்கியது, தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் 500க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஏழு கட்டமாக நடந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. வெகு சில இடங்களை தவிர பல இடங்களில் வாக்கு பதிவு சுமுகமாக நடைபெற்றது.
இதனை அடுத்து சில தினங்களுக்கு முன்பு வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி இந்திய அளவில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகள் என்னும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
undefined
இந்த சூழ்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் 40க்கு 40 என்ற விகிதத்தில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், திமுகவின் தோழமையில் இருக்கும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் திரு கமலஹாசன் வெளியிட்ட அந்த பதிவில் "திமுக அரசு செய்துகாட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை அதன் தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் அறுவடை செய்திருக்கிறது. மக்களுக்காக சிந்தித்து, மக்களுக்கான பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப்படும் நல்லாட்சிக்கு ஆதரவளிக்க மக்களும் தயாராக இருப்பதையே இந்த மாபெரும் வெற்றி காட்டுகிறது".
"திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தொடங்கி தான் எதிர்கொண்ட அனைத்து தேதிகளிலுமே அருமை நண்பர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் வெற்றியை குவித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். இந்தியாவை காக்கும் போரில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து களம் கண்ட கூட்டணி கட்சியினர்களுக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும் எங்கள் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த தமிழ்நாடு மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்".
இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க! pic.twitter.com/Tz3puzXD0D
— Kamal Haasan (@ikamalhaasan)"சிந்தாமல், சிதறாமல், சந்தேகமே இல்லாமல் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி இந்தியாவிற்கு வழியும், ஒளியும் காட்ட கூடியவை. இந்தியா வாழ்க.. தமிழ்நாடு ஓங்குக.. தமிழ் வெல்க" என்று உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கூறியுள்ளார்.