கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக கூடுதலாக உழைக்க வேண்டும்: அதிமுகவினருக்கு இ.பி.எஸ். அட்வைஸ்

By SG BalanFirst Published Mar 28, 2024, 7:11 PM IST
Highlights

டீசல் விலை உயர்வு தான், விலைவாசி உயர்வுக்கு காரணம். பெட்ரோல் - டீசல் விலை மத்திய அரசும் குறைக்க வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தினார்.

அதிமுக தொண்டர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக உழைப்பதைவிட கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்காக கூடுதலா உழைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளன. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளருக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் வி. விஜய பிரபாகரனை ஆதரித்து வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிச்சாமி, மத்தியில் ஆளும் பாஜகவைப் பற்றி எந்த விமர்சனமும் இல்லாமல், திமுகவை மட்டும் சரமாரியாக விமர்சித்தார்.

படுகுழியில் தள்ளிய பாஜக... நாட்டை மீட்க இந்தியா கூட்டணி ஆட்சி வரவேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

"சிவகாசி என்றாலே பட்டாசு உற்பத்தி தான் அதன் அடையாளம். பட்டாசு தொழில் இன்று மோசமான நிலையில் இருக்கிறது. உச்சநீதிமன்றம் வரை சென்று பட்டாசு உற்பத்தி தொழிலை பாதுகாக்க போராடியது அதிமுக அரசு. 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு மத்திய அரசுக்கு திமுக அழுத்தம் கொடுத்திருந்தால் பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட்டு இருக்கும். இம்முறை நாம் வென்று பட்டாசு தொழிலை பாதுகாக்க சட்ட திருத்தத்தை கொண்டுவர அழுத்தம் கொடுப்போம்" என்றும் உறுதியளித்தார்.

"பட்டாசு தொழில் சரிந்து கிடக்கிறது. அப்படியிருக்க நீங்கள் நலமா என கேட்கிறார் ஸ்டாலின். திமுக ஆட்சியில் யார் நலமாக இருக்க முடியும்? எங்களை பற்றி அதிமுக ஆட்சியில் புகார் கொடுக்கும்போது உங்களுக்கு ஆளுநர் நல்லவர், இப்போது கெட்டவரா?" எனவும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் இறைவனால் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட கொடை என்று புகழாரம் சூட்டிய ஈபிஎஸ், அதிமுக தொண்டர்கள் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு கூடுதலாக உழைத்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்றும் ஈபிஎஸ் அறிவுறுத்தினார்.

"எப்போதும் திமுகவுக்கு தங்கள் கூட்டணிக் கட்சிகளை வாழ வைத்த வரலாறு இல்லை. அதிமுக கூட்டணிக் கட்சிகளை தூக்கிவிடும். திமுக பொதுக்குழு கூட்டத்தில், திமுக அமைச்சர்களால் தூக்கம் போய்விட்டது என்று ஸ்டாலின் புலம்புகிறார்" என்றும் அவர் கூறினார்.

"தாலிக்கு தங்கம் திட்டத்திற்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்குவோம் என சொல்லிவிட்டு, இன்று அந்த திட்டத்தையே திமுக அரசு நிறுத்திவிட்டது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கொலை, கொள்ளை, கஞ்சா போதையில் வெட்டுக்குத்து சம்பவம் நடக்கிறது" என்று விமர்சித்தார்.

திமுக தலைவராக ஒரு தொண்டரை நிறுத்துவாரா? ஸ்டாலினுக்கு சவால் விடும் இபிஎஸ்

"தமிழகத்தில் எது கிடைக்கிறதோ இல்லையோ, போதை பொருள் அதிகமாக கிடைக்கிறது. ஒவ்வொரு சந்திலும் கஞ்சா சுலபமாக கிடைக்கிறது. திமுக அயலக அணி நிர்வாகி போதை பொருள் கடத்தி கைதாகியுள்ளார். போதை பொருள் கடத்த அயலக அணி வைத்துள்ளனர்" என்று இபிஎஸ் குற்றம்சாட்டினார்.

"திமுக ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை. நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், உதயநிதியும், சபரீசனும் 30 ஆயிரம் கோடி சேர்த்து வைத்துள்ளதாக கூறினார். இதை ஆளுநர் விசாரிக்க வேண்டும் என சொன்னோம், அவர் விசாரிக்கவில்லை" எனவும் குறை கூறினார்.

"கேஸ் சிலிண்டர் விலை மாதம் 100 ரூபாய் குறைப்போம், பெட்ரோல் - டீசல் விலை குறைப்போம் என்றார்கள். குறைத்தார்களா? டீசல் விலை உயர்வு தான், விலைவாசி உயர்வுக்கு காரணம். பெட்ரோல் - டீசல் விலை மத்திய அரசும் குறைக்க வேண்டும்" எனவும் இபிஎஸ் வலியுறுத்தினார்.

"புதிய தலைமை செயலக கட்டிட முறைக்கேடு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் எங்கள் அரசு வழக்கு தொடர்ந்த நிலையில், இன்று ஆட்சி மாறியதும் அந்த வழக்கை திரும்பப் பெற்றுள்ளார்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் இதை விசாரிக்கும்" என்றும் தெரிவித்தார்.

கருந்துளை ஆராய்ச்சியில் புதிய மைல்கல்! EHT தொலைநோக்கி பதிவுசெய்த புதிய படங்கள்!

click me!