பணம் கொடுப்போம்னு சொல்லி ஏமாத்திட்டாங்க; தேனியில் பரப்புரைக்கு அழைத்து வரப்பட்ட பெண்கள் குமுறல்

By Velmurugan s  |  First Published Mar 28, 2024, 7:10 PM IST

பணம் வழங்குவதாக டோக்கன் கொடுத்து அழைத்து வந்து பிரச்சாரம் முடிந்ததும் திமுகவினர் பணம் வழங்காமல் ஏமாற்றி சென்றதாக அப்பகுதி பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றிய பகுதிகளான G.கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் காலை 9 மணி முதல் தேனி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்  தனது ஆதரவாளர்களுடன் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பொம்மிநாயக்கன்பட்டியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக திமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் 100 ரூபாய் தருவதாக டோக்கன் கொடுத்து  அழைத்து வந்ததாகவும், பிரச்சாரத்திற்குப் பின்பு  ஒரு சில பெண்களுக்கு மட்டும் பணம் கொடுத்து விட்டு  தங்களுக்கு கொடுக்கவில்லை எனக் கூறி அவர்கள் கொடுத்த  டோக்கனுடன் தங்களை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டினர்.

5 வருசமா உங்கள பாக்கவே இல்லையே; கரூரில் ஜோதிமணியை அலரவிட்ட பொதுமக்கள்

மேலும் திமுக உறுப்பினர்கள் பிரச்சாரக் கூட்டத்திற்கு வருகை தந்த  பெண்களுக்கு கையில் பணத்தை கட்டாக வைத்துக் கொண்டு 100 ரூபாய் கொடுக்கும்  வீடியோவும் வெளியாகி உள்ளது. தேர்தல் என்றாலே வேட்பாளர் ஒரு இடத்தில் வந்து பேசுவதற்காக கூட்டத்தைக் கூட்டுவதற்கு பணம் கொடுத்து தான் கூட்டத்தை கூட்டுகிறார்கள் என்பது  இதன் மூலம் உறுதியாகி உள்ளது. இருந்தாலும் பிரசார கூட்டத்திற்கு பணம் தருவதாக அழைத்து வந்து டோக்கன் கொடுத்து விட்டு வேலை முடிந்ததும் பணம் தராமல் சென்றதாக அப்பகுதி பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

click me!