வேட்பு மனு தாக்கலின் போது போலீசார் மீது வாகனத்தை ஏற்ற முயன்ற டிடிவி தினகரன்? போலீஸ் வழக்கு பதிவு

By Velmurugan s  |  First Published Mar 28, 2024, 1:16 PM IST

வேட்பு மனுவை தாக்கல்  செய்ய வந்த டிடிவி தினகரன் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி அவர் மீதும், அமமுக நிர்வாகிகள் மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தேனி ஆட்சியர் அலுவலகத்தில்  வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான நேற்று மாலை 2 மணி அளவில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வருகை தந்தார். தேனி அன்னஞ்சி விளக்கில் இருந்து தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு 100 மீட்டர் முன்பு வரை டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஊர்வலமாக வருவதற்கு போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி டிடிவி தினகரன் பிரசார வாகனத்தில் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைய முயன்றதால் காவல்துறையினருக்கும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

“கொங்குச் சீமையின் கொள்கை வேங்கை” எம்.பி. கணேசமூர்த்தி மறைவால் வாடும் வைகோ

பின்னர் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு டிடிவி தினகரனின் பிரசார வாகனம் மற்றும் அவருடன் ஏராளமானோர் போலீசாரின் தடுப்புகளை மீறி உள்ளே சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அமமுக தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன், அமமுக நிர்வாகி ராம் பிரசாத், மற்றும் ஏராளமான அமமுக கட்சி நிர்வாகிகள் மீது தேனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

click me!