முன்னாள் முல்வர் ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளி நாட்டிற்கு அழைத்துச் செல்லாமல் கள்ள மௌனம் காத்த ஓ.பன்னீர்செல்வத்தை்தை அம்மாவின் ஆன்மா வஞ்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமி அறிமுகக் கூட்டம் தேனி தொகுதியில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், தாய்மார்களுக்கு உதவித் தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்துவோம் என்ற எங்களது தேர்தல் வாக்குறுதியை இந்தியாவே திரும்பி பார்க்கிறது. அதே உறுதியை நீங்கள் அளித்தால் அதனை யாரும் நம்புவதில்லை. காரணம் நீங்கள் அதை செய்யமாட்டீர்கள் என அவர்களுக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் எங்கள் தேர்தல் அறிக்கை உடனடியாக பேசுபொருளாகிறது.
undefined
3 முறை முதல்வராக பொறுப்பு வகித்த ஓ.பன்னீர்செல்வம் இன்று கட்சியின் கரைவேட்டியை கூட கட்டமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கட்சியின் கொடி, சின்னம், லெட்டர்பேட் உள்ளிட்டவற்றை கூட அவரால் பயன்படுத்த இயலவில்லை. ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தபோது முதல்வராக பொறுப்பு வகித்த ஓ.பன்னீர்செல்வம் அவரை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம்.
நாங்க ஜெயிச்சா ரூ.1000 இல்ல ரூ.1,500; திமுகவுக்கு அண்ணாமலை சவால்
ஆனால், அப்போது அதனை செய்யாமல் கள்ளமௌன சாமியாராக இருந்துவிட்டார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீங்கள் தான் காரணம். 3 முறை முதல்வராக பொறுப்பு வகித்த ஓ.பன்னீர்செல்வம் இன்று ஒற்றை தொகுதிக்காக வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் சின்னத்திற்காக அது வேண்டும், இது வேண்டும் என கேட்கிறார். அம்மாவின் ஆன்மா தான் ஓ.பன்னீர்செல்வத்தை வஞ்சிப்பதாக நினைக்கிறேன். முன்னாள் முதல்வர்கள் யாருக்கும் இந்த வந்ததில்லை. தேர்தல் முடிந்த பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அரசியலை விட்டே விலகும் நிலைக்கு அவரை ஜெயலலிதாவின் ஆன்மா தள்ளும் என்றார்.