ஒ.பி ரவீந்திரநாத்தின் தேனி தொகுதியை தட்டிப் பறிப்பது தவறு என நினைத்திருந்தேன், ஆனால் அவரே விருப்பப்பட்டு என்னை போட்டியிட அழைத்ததன் பேரில் நான் இங்கு போட்டியிடுகிறேன் என பிரச்சாரக் கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசியுள்ளா்.
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனயாக கூட்டணியில் போட்டிடும் அமமுக தலைவர் டிடிவி தினகரன், தேனி தொகுதி களமிறங்கியுள்ளார். போடி மற்றும் கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போடிநாயக்கனூர், தர்மத்துப்பட்டி, சிலமலை, இராசிங்கபுரம், தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குக்கர் சின்னத்தில் வாக்களிக்கும் படி நின்ற வேனில் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்தார்.
தேவாரம் பகுதி பிரச்சாரத்தின் போது, அவரதுக்கு ஆதவராக தற்போதைய எம்பியும், ஓபிஎஸ் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் கலந்துகொண்டு, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, டிடிவி தினகரனுக்கு மாலை அணிவித்து குக்கர் சின்னத்தை பொதுமக்களிடம் காட்டி டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தார்.
பிரச்சாரத்தில் பேசிய டிடிவி தினகரன், ரவீந்திரநாத் எம்பியாக இருந்த தொகுதியை தான் தட்டி பறிப்பது தவறு என்று நினைத்திருந்தேன் எனக் கூறிய அவர், ஆனால் அம்மாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அவரே என்னிடம் நீங்கள் தான் இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் எனக் கூறி என்னை அழைத்தன் பேரில் தான் போடியிடுவதாக தெரிவித்தார்.
குருவை எதிர்கொள்ளும் சிஷ்யன்.! டிடிவி தினகரனா.? தங்க தமிழ்செல்வனா.? தேனி களத்தில் வெற்றிப்பெறப்போவது யார்.?
அவரைத் தொடர்ந்து பேசிய, ஓபி ரவீந்திரநாத் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். தன்னை எப்படி வெற்றி பெற வைத்தீர்களோ அதே போல் டிடிவி தினகரனையும் வெற்றி பெற வைக்க வேண்டும் என குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
முன்னதாக, போடிநாயக்கனூர் பகுதி பிரச்சாரத்தில் பேசிய டிடிவி தினகரன், என் அன்பு நண்பனான ஓபிஎஸ் எனக்காக தேனி தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்டு, அவர், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார் அங்கு அவரும் மகத்தான வெற்றி பெறுவார் என்றும் டிடிவி தினகரன் பேசினார்.