ஜெயலலிதாவை தீர்த்து கட்டியதே பாஜக தான்; என்னிடம் ஆதாரம் உள்ளது - மன்சூர் பரபரப்பு குற்றச்சாட்டு

By Velmurugan sFirst Published Mar 28, 2024, 6:54 PM IST
Highlights

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு மத்திய பாஜக அரசு தான் காரணம் என்றும், என்னிடம் அதற்கு ஆதாரம் உள்ளதாகவும், நடிகரும் சுயேட்சை வேட்பாளருமான மன்சூர் அலிகான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வேலூரில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் இன்று வேட்பு மனு பரிசீலனைக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஜெயலலிதா அம்மாவை குத்துயிரும், கொலை உயிருமாக ஆக்கியதற்காக ஓபிஎஸ் தனித்து விடப்பட்டுள்ளார். ஓபிஎஸ் என்னை போன்று தனி சின்னத்திற்காக கெஞ்சி கொண்டிருக்கிறார்.

நான் தான் முதல் முதலில் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தேன். முதல் முதலில் அதீத வாக்கு வித்தியாசத்தில் நான் தான் வெற்றி பெறுவேன். கே.வி.குப்பம் பகுதியில் ஒரு மாட்டு ஆஸ்பத்திரி கூட இல்லை. தேர்தலில் நிற்க நோக்கமே மத்தியில் பாசிச பிசாசாக உள்ள மோடி அரசை வேர் அறுக்க வேண்டும் என்பதற்காகத் தான். முன்னாள் முதல்வரை தீர்த்து கட்டியதே அவர்கள் தான் இதை வெளிப்படையாக சொல்லி வருகிறேன். எல்லா ஆவணமும் கேஸ் போட்டு வாங்கி வைத்துள்ளேன்.

5 வருசமா உங்கள பாக்கவே இல்லையே; கரூரில் ஜோதிமணியை அலரவிட்ட பொதுமக்கள்

இந்த பக்கம் அதிமுக, அந்த பக்கம் பாஜக இரண்டையும் எதிர்ப்பது தான் எனது நோக்கம். அதிமுக, பாஜக மட்டுமல்ல அனைவரையும் நான் தாக்கி பேசுவேன். எனக்கும் விவசாய சின்னம் வந்தது ஆனால் மனசாட்சி இடம் கொடுக்காததால் விவசாய சின்னத்தை டிக் பண்ண வில்லை. டார்ச் லைட்டும் இருந்தது. மற்றவர்களுக்கு விளக்கு பிடிக்கும் வேலை எனக்கு இல்லை என்பதால் அதை நான் விட்டு விட்டேன். 

ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி கையில் இருந்து 500, 1000ஐ பிடிங்கி விட்டனர்; கரூரில் ஜோதிமணிக்கு ஆதரவாக கனிமொழி பிரசாரம்

சீமானுக்கு சின்னம் மறுக்கப்பட்டது மிகப்பெரிய அநியாயம் தான். நான்கு, ஐந்து லட்சம் பேருக்கு வட்டி இல்லா கடன் கொடுக்க திட்டம் வைத்துள்ளேன். திருமா, சீமான், வைகோ உள்ளிட்டோருக்கு சின்னம் மறுக்கப்பட்டுள்ளது. ஈரோடு எம்பி கேணேஷ மூர்த்தி மறைவிற்கு நான் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் இதுபோல் நிகழக் கூடாது" என்றார்.

click me!