
செல்வாக்கு மிக்க எங்கள் வேட்பாளர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய முயற்சிக்கிறார்கள் என கலங்கியபடி அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக மீண்டும் கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை கதிர் ஆனந்தின் தந்தையும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் திறந்து வைத்தார். இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன்: மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கி இந்தியா சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த நாட்டில் ஜனநாயகத்தின் குரல்வலையை நெரிக்கின்ற காரியத்தை மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: School College Holiday: பங்குனி உத்திர திருவிழா.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்!
பிரதமர் மோடி வாரிசு அரசியல் பற்றிப் பேசுகிறார். ஆனால் நாங்கள் தியாகம் செய்ததை போல் அவர்கள் செய்துள்ளார்களா? நாங்கள் தியாகத்திலேயே வளர்ந்தவர்கள். மிசாவில் நான் கைதான போது எனது காலரை எனது மகன் கதிர் ஆனந்த் பிடித்துக் கொண்டான். அந்தப் பிஞ்சு கையை காவல்துறையினர் தூக்கி எறிந்து என்னை கைது செய்து செய்தார்கள். அதற்குப் பிறகு மூன்று மாத காலம் அவர்களைப் பார்க்க முடியவில்லை.
பிறகு ஒரு வயது மகனான கதிர் ஆனந்தை சிறையில் பார்த்தபோது கட்டித் தழுவிக் கொள்ளலாம் என ஏங்கினேன். என்னை தொட முயற்சித்த போது அங்கு இருந்த காவலர் ஒருவர் நீ குற்றவாளி என்பதால் குழந்தையை தொடக்கூடாது என கூறி தடுத்துவிட்ட நிகழ்வால் கண்கள் கலங்கினேன் என்றார். வடகொரியாவில் நடப்பதுபோல ஒரு ஆட்சி நடைபெற வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்த நாட்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது போல் ஒரே கட்சியை கொண்டுவர முயற்சிக்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: A Raja 2G Appeal Case : 2ஜி வழக்கு.. ஆ.ராசாவுக்கு, கனிமொழிக்கு சிக்கல்.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: தேர்தல் சமயத்தில் வருமான வரித்துறை சோதனை மட்டுமல்ல இன்னும் பல செய்வார்கள். எங்கள் வேட்பாளரையே கைது செய்யச்சொல்லி, இங்கு செல்வாக்குப் பெற்ற ஒரு வேட்பாளராக நிற்பவர் மத்தியில் சொல்லியிருக்கிறார். மேலிடத்தில் இருந்து எனக்கு அந்த செய்திகள் வந்தன. அதைப் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை என துரைமுருகன் கூறியுள்ளார்.