மீண்டும் வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்தை களமிறக்கிய திமுக தலைமை.. பின்னணி என்ன? பரபரப்பு தகவல்!

By vinoth kumar  |  First Published Mar 21, 2024, 2:29 PM IST

கடந்த முறை வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கதிர் ஆனந்துக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படாது என்று கூறப்பட்டு வந்த நிலையில் மீண்டும் அவருக்கே வாய்ப்பு வழங்கி திமுக தலைமை அதிர்ச்சி கொடுத்துள்ளது.


கடந்த முறை வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கதிர் ஆனந்துக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படாது என்று கூறப்பட்டு வந்த நிலையில் மீண்டும் அவருக்கே வாய்ப்பு வழங்கி திமுக தலைமை அதிர்ச்சி கொடுத்துள்ளது. மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதற்கான காரணமும் வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில்,  திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 10 தொகுதிகளும்,  இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதியும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதியும், மதிமுக, முஸ்லிம் லீக், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 

Latest Videos

இதையும் படிங்க: 6 முறை எம்.பி.யாக இருந்த பழனிமாணிக்கம் கழற்றிவிடப்பட்டார்! ஜெ. பாணியில் ஸ்டாலின்! யார் இந்த முரசொலி தெரியுமா?

இந்நிலையில், 21 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இதில் 10 எம்.பி.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. 11 புதுமுகங்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்துக்கு சீட் வழங்கப்படுவது சந்தேகம் என்றே கூறப்பட்டு வந்தது. ஏனென்றால் 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கடும் போட்டிகளுக்கு இடையே அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை சுமார் 8000 வாக்கு வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். 

மேலும், வேலூர் மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகையால் இந்த தொகுதியில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டி வெற்றி பெற்ற ஜெகத்ரட்சகணன் களமிறங்க உள்ளதாகவும், கதிர் ஆனந்த் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், வேலூர் தொகுதியில் போட்டி என்பதில் கதிர் ஆனந்த் உறுதியாக இருந்தார். 

இதையும் படிங்க:   கிரீன் சிக்னல் கொடுத்த ஆளுநர்! அதிமுக முன்னாள் அமைச்சர்களை ரவுண்ட் கட்டப்போகும் சிபிஐ!

இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக மீண்டும் வேலூர் மக்களவை தொகுதி கதிர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மீண்டும் கதிர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, செயல்பாட்டின் அடிப்படையில் எம்.பி. தொகுதி நிதியில் இருந்து. வேலூர் மாவட்டதற்கு சத்துவாச்சாரி  சுரங்கப்பாதை கொண்டு வந்தது முதல் வேலூர் ஏர்போர்ட் செயல்பாட்டுக்கு வரும் வரைக்கும் நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் குரல் எழுப்பியது அதிகம். வேலூர் மக்களவை தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளுக்கு நேரில் செல்ல முடியாவிட்டாலும்  மக்களுக்கு தேவையான  விஷயத்தை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தீர்த்து வைத்துள்ளார். வந்தே பாரத் ரயில் காட்பாடியில் நின்று செல்ல வழிவகுத்ததில் முக்கிய பங்காற்றியவர் கதிர் ஆனந்த். மேலும் கே.வி.குப்பம் ஒன்றியம் சுங்கச்சாவடி வசூல் மையம் வராமல் தடுக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக கதிர் ஆனந்த். 

இதையும் படிங்க:  கேட்டதை கொடுத்த தேர்தல் ஆணையம்.. குஷியில் டிடிவி.தினகரன்.. இந்த முறையாவது விசிலடிக்குமா குக்கர்?

குறிப்பாக பாஜக கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ள நிலையில் அங்கு ஏசி.சண்முகம் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளார்.  வேலூர் மக்களவை தொகுதியை உள்ளடக்கிய அணைக்கட்டு, கே.வி.குப்பம் வேலூர் உள்ளிட்ட இடங்களில் பாமக செல்வாக்கு இருப்பதால் இந்த ஏசி. சண்முகத்திற்கு செல்லும் பட்சத்தில் அதே சமூகத்தை சேர்ந்தவரை வேட்பாளராக அறிவித்தால் கதிர் ஆனந்துக்கும் செல்லும் என்பதால் இதையெல்லாம் கருத்தில் கொண்டு  திமுக  லைமை மீண்டும் கதிர் ஆனந்துக்கு வாய்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. 

click me!