மோடி சுட்ட வடைக்கு எதிராக பாஜகவினர் தாமரையே விடை என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர்
நாடாளுமன்றத் தேர்தல் களைக்கட்டியுள்ளது. தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை என ஒருபக்கம் பணிகள் நடந்து கொண்டிருக்க, அரசியல் கட்சிகள் ஒருவரையொருவர் மாறிமாறி விமர்சித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், ஏற்கனவே கண்டா வர சொல்லுங்க, நாடாளுமன்ற உறுப்பினரை காணவில்லை என்ற வாசகங்கள் பொறித்த சுவரொட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
போதைப்பொருள் விவகாரத்தில் அவதூறு வழக்கு: முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை காட்டம்!
அதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவதாக கூறி, அவருக்கு எதிரான திமுகவினர் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். வாயைத் திறந்தாலே வடை வடையாய் சுட்டுத்தள்ளும் பிரதமர் மோடி எனக் கூறி 'வாயாலே வடை சுடும்' போராட்டத்தை திமுகவினர் மேற்கொண்டனர்.
undefined
பிரதமர் மோடி அறிவித்த பல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருப்பதை சுட்டி காட்டும் வகையில் பதாகைகளையும் கையில் ஏந்தியும், பொதுமக்களுக்கு வடை வழங்கியும் திமுகவினர் பிரசாரம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில், மோடி சுட்ட வடைக்கு எதிராக பாஜகவினர் தாமரையே விடை என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் இதுதொடர்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், வளர்ச்சி அரசியலா ? வாரிசு அரசியலா? என கேள்விகள் கேட்கப்பட்டு தாமரையே விடை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.