அட இது என்ன புது ட்விஸ்டா இருக்கே! தமிழகத்தில் அதிமுகவுக்கு! புதுச்சேரியில் பாஜகவுக்கு ஆதரவு! புரட்சி பாரதம்!

By vinoth kumar  |  First Published Apr 4, 2024, 9:40 AM IST

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுகவுக்கு முதல் கட்சியாக புரட்சி பாரதம் கட்சி ஆதரவு தெரிவித்தது. இந்த கட்சிக்கு திருவள்ளூர் அல்லது விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 


மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு ஆதரவளித்த புரட்சி பாரதம் கட்சி புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்து அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளார். 

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுகவுக்கு முதல் கட்சியாக புரட்சி பாரதம் கட்சி ஆதரவு தெரிவித்தது. இந்த கட்சிக்கு திருவள்ளூர் அல்லது விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் புரட்சி பாரதம் கட்சிக்கு தொகுதிகள் எதும் ஒதுக்கப்பட்டாததால் அக்கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். இதனால், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி வெளியேறும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பது குறித்து இரண்டு நாட்களில் தெரிவிப்பதாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி தெரிவித்திருந்தார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: மதுரை சித்திரை திருவிழா.. 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களின் சமூக அறிவியல் தேர்வு தேதி மாற்றம்!

தேர்தல் பிரச்சாரம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் பூந்தமல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெகன்மூர்த்தி: தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம். அதிமுகவின் முக்கிய தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் வாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்ததின் பேரில் தற்போது ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருந்தார். 

இதையும் படிங்க: கச்சத்தீவை தாரைவார்த்து விட்டு இப்படி பொய் சொல்லி ஆதரவு கேட்பது வெட்கக்கேடு! திமுக, காங்கிரஸை விளாசும் பாஜக!

இந்நிலையில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு ஆதரவளித்த புரட்சி பாரதம் கட்சி, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. புரட்சி பாரதம் கட்சியின் இந்த இரட்டை நிலைபாடு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. 

click me!