நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைவார்கள் - டிடிவி தினகரன் நம்பிக்கை

By Velmurugan s  |  First Published Apr 3, 2024, 10:59 PM IST

ஓ.பன்னீர்செல்வத்திற்கும், எனக்கும் பதவி ஆசை கிடையாது. துரோகிகளிடம் இருந்து அதிமுகவை மீட்டு தொண்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம் என திருச்சி தேர்தல் பரப்புரையில் டிடிவி தினகரன் பேச்சு.


திருச்சி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், செந்தில் நாதனை குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

மோடி பிரதமர் ஆவதற்கு திருச்சியில் செந்தில்நாதனை வெற்றி பெற செய்ய வேண்டும். ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் துணிச்சலாக தனி சின்னத்தில் போட்டியிடுகிறார். ஜெயபால், 1977 இல் புரட்சித் தலைவரை முதல் முதலாக அருப்புகோட்டை தொகுதியில்  எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரின் மகன். அம்மா ஜெயலலிதா டிசம்பர் 4-ம் தேதி அட்டாக் வந்து ஐந்தாம் தேதி உயிரிழந்தார். அவர் முன்பே இறந்து விட்டார் என பொய் கூறியவரை மதுரை அதிமுக வேட்பாளராக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த தேர்தலுக்குப் பின்பு அதிமுக தொண்டர்கள் இணைந்து விடுவார்கள். 

Tap to resize

Latest Videos

undefined

தனி்யார் தொலைக்காட்சி விவாதத்தில் வெடித்த மோதல்; குடும்ப தலைவரை வெட்டி கொன்ற மனைவி, மகன் - சேலத்தில் பரபரப்பு

எனக்கும் ஓபிஎஸ்.க்கும் பதவி வேண்டும் என்ற ஆசை இல்லை. துரோகிகளிடம் இருக்கும் அதிமுகவை மீட்டு தொண்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எங்களது எண்ணம். திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் 'காசை மணல் போல் அள்ளி வீசுகிறார்' என கேள்வி பட்டேன். பணத்திற்கு ஆசைப்பட்டு ஏமாந்தால் நாங்கள் பொறுப்பல்ல.

மோடியின் காமெடி டைம்... நிர்மலாவின் வாழைப்பழ காமெடி... : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு

திமுக வேட்பாளர் செயல்வீரர்கள் கூட்டத்தில் கதறி அழுதார். பாஜகவில் தாமரை சின்னத்தில் நிற்க சொல்லி எந்த நிர்பந்தமும் இல்லை. ஆனால் பொய் பரப்பினர். தற்போது நானும் ஓபிஎஸ் -ம் தனி சின்னத்தில் தான் நிற்கிறோம். ஆனால் தற்போது யார் அந்த நிர்பந்தத்தில் இருக்கிறார் என உங்களுக்கு தெரியும். (துரை வைகோவை குறிப்பிடுகிறார்.) பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமமுக வேட்பாளர் செந்தில் நாதனை வெற்றிபெற செய்ய வேண்டும் என திறந்த வெளி வாகனத்தில் இருந்து வாக்கு சேகரித்தார். 

இந்த வாக்கு சேகரிப்பின் போது முன்னாள் அமைச்சர் வெல்லமடி நடராஜன், முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

click me!