உள்ளாட்சித் தேர்தல் - காஞ்சிபுரத்தில் வார்டு மறுவரையறை கருத்துருக்கள், ஆட்சேபனைக் கூட்டம்...

 
Published : Jan 26, 2018, 06:56 AM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
உள்ளாட்சித் தேர்தல் - காஞ்சிபுரத்தில் வார்டு மறுவரையறை கருத்துருக்கள், ஆட்சேபனைக் கூட்டம்...

சுருக்கம்

Local Elections - ward redefine comments and Condemnation meeting in Kanchipuram ...

காஞ்சிபுரம்

உள்ளாட்சித் தேர்தலையொட்டி காஞ்சிபுரத்தில் வார்டு மறுவரையறை கருத்துருக்கள், ஆட்சேபனைக் கூட்டம் மறுவரையறை ஆணையத் தலைவரும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையருமான எம்.மாலிக் ஃபெரோஸ் கான் தலைமையில் நடைப்பெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி கூட்டரங்கில் உள்ளாட்சித் தேர்தல் வார்டுகள் தொடர்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக்  கூட்டத்திற்கு, மறுவரையறை ஆணையத் தலைவரும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையருமான எம்.மாலிக் ஃபெரோஸ் கான் தலைமைத் தாங்கினார்.

நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பாஸ்கர், பேரூராட்சிகளின் இயக்குநர் பழனிசாமி, தமிழ்நாடு மறுவரையறை ஆணைய செயலர் டி.எஸ்.ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வரவேற்றார்.

இதில், தமிழக தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, வரைவு மறுசீரமைப்பு கருத்துரு வெளியிடப்பட்டு உள்ளது.

மாவட்டங்களில் உள்ள நகராட்சி வார்டுகள், பேரூராட்சி வார்டுகள், மாவட்ட ஊராட்சி வார்டுகள், ஒன்றிய வார்டுகள், கிராம ஊராட்சி வார்டுகள் ஆகியவை மறு சீரமைப்பு செய்யப்பட்ட வரைவுகள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் இம்மறுசீரமைப்பு குறித்து கருத்துருக்கள் மற்றும் ஆட்சேபனைகள் பெறும் வகையில், சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் அறியும் வகையில் ஒட்டப்பட்டது.

அதன்படி, கருத்துகள், ஆட்சேபனைகள் ஜனவரி 12-ஆம் தேதி வரை பெறப்பட்டன. அதனைத் தொடந்து, மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பரிசீலனையில் உள்ளன.  அந்த மனுக்களை அளித்த மக்கள் நேற்று நடைப்பெற்ற கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையரிடம் குறைகளைத் தீர்வு காண நேரடியாக தெரிவித்தனர்.

அதன்படி, இந்தக் கூட்டத்தில், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மக்களிடம் தேர்தல் ஆணையர் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக கோரிக்கைகள் கேட்டறியப்பட்டன.

அதேபோல, அவற்றின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார்.  மேலும், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு மறுவரையறை ஆணையத் தலைவரிடம், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து 20 மனுக்களும், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து 43 மனுக்களும், கடலூர் மாவட்டத்திலிருந்து 7 மனுக்கள், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 1 மனு என மொத்தம் 71 மனுக்கள் வந்தன.

இதனையடுத்து, "இந்த மனுக்கள் பரிசீலனை செய்து, ஒருவார காலத்திற்குள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மறுவரையறை ஆணையத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும்" என்று மாநில தேர்தல் ஆணையர் வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, கடலூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம்.வாட்நெரே, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மாநகராட்சி ஆணையர், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!