21 நாட்களுக்குள் கடன்! மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அமைச்சர் உதயநிதி உறுதி

By SG BalanFirst Published Mar 29, 2023, 3:01 PM IST
Highlights

தமிழகச் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவிகளை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு அமைச்சர் உதயநிதி பதில் கூறினார்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கடன் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பின் 15 நாட்களுக்குள் அனுமதிக்கப்பட்டு, 21 நாட்களுக்குள் அந்தந்த வங்கி கணக்கில் கடன் வரவு வைக்கப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவிகளை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா என பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் உதயநிதி பதில் கூறினார். அப்போது, "வங்கிக் கணக்குகளை முறையாகப் பராமரித்தல், கூட்டங்களைத் தவறாமல் நடத்துதல் மற்றும் குழு உறுப்பினர்கள் மற்றும் குழுவில் உள்ள பிறருக்கு சுழற்சி முறையில் கடன் வழங்குதல் போன்ற முறையான நடைமுறைகளைப் பின்பற்றினால், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வங்கிகளில் கடன் பெறலாம்" என்று கூறினார்.

லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் தகுதிநீக்க உத்தரவு வாபஸ்! ராகுல் விவகாரத்திலும் இப்படி நடக்குமா?

“அவர்கள் கடனுக்காக விண்ணப்பித்தால், விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு 15 நாட்களுக்குள் அங்கீகரிக்கப்படும். அடுத்த 21 நாட்களுக்குள் கடன் தொகை சுய உதவிக்குழுக் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்” எனவும் அமைச்சர் உதயநிதி வாக்குறுதி அளித்தார். சுய உதவிக் குழுக்களின் கடன் விண்ணப்பங்கள் ஏதேனும் 21 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருந்தால், வங்கியாளர்கள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என்றும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

2022-23ஆம் ஆண்டில் மொத்தமாக ரூ.25,022.19 கோடி கடன் வழங்கப்பட்டதன் மூலம், 4,39,349 சுய உதவிக் குழுக்கள் பயனடைந்துள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.25,000 கோடியைத் தாண்டியதன் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் வெற்றியையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கரூர் மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 'பூமாலை' வணிக வளாகம் எப்போது திறக்கப்படும் என்று திமுக உறுப்பினர் ஆர். மாணிக்கம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 29 மாவட்டங்களில் உள்ள பூமாலை வணிக வளாகங்களையும் ரூ.6.10 கோடியில் செலவில் சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டார்.

செவ்வாய்க்கிழமை 2023-24ஆம் நிதி ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசிய பின், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன் எழுந்து, கவுந்தம்பாடி நாட்டுச் சர்க்கரைக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கவுந்தம்பாடி நாட்டுச் சர்க்கரை சுவைக்கு பெயர் பெற்றது என்றும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி முருகன் கோயிலில் பிரசாதம் தயாரிப்பதற்கு கவுந்தம்பாடி நாட்டுச் சர்க்கரைதான் பயன்படுத்தப்படுகிறது என்றும் சொன்னார்.

கொலை வழக்கில் ஜாமீன் வழங்கலாமா? முதல் முறையாக ChatGPT -ஐ கேட்டு தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்

click me!