தாயை பிரிந்த குதிரை.. பேருந்தில் உள்ள படத்தை பார்த்து துரத்திய சம்பவம் - நெகிழ வைத்த காணொளி

By Raghupati R  |  First Published Sep 12, 2022, 10:10 PM IST

பேருந்தில் உள்ள குதிரை படத்தை துரத்தி சென்ற குதிரை குட்டியின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கோவையில் பேருந்தின் பக்கவாட்டு பகுதியில் ஒட்டப்பட்ட குதிரை ஸ்டிக்கர் படத்தை பார்த்து, பேருந்தின் பின்னாடி நீண்ட தூரம் குதிரை ஓடி வந்த காணொளி வெளியாகியுள்ளது.கோவை அருகே உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே தர்ப்பணம் மண்டபம் மற்றும் படித்துறை பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றி திரிவது வழக்கம் ஆகும்.

Tap to resize

Latest Videos

undefined

அதில் ஒரு குதிரை தனது குட்டியை பிரிந்து வேறு பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தாய் குதிரையை காணாது தேடி வந்த குதிரை குட்டி இன்று , பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த குதிரை படத்தை பார்த்துள்ளது. அது தன்னுடைய தாய் குதிரை என்று நினைத்து பேருந்தை துரத்தி ஓடி வந்தது. இந்த காணொளி பார்ப்போர் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..இந்துக்கள் விபச்சாரிகளா.. திமுக எம்.பி ஆ.ராசா சர்ச்சை பேச்சு.! வலுக்கும் கண்டனங்கள் - முதல்வர் பதில் சொல்வாரா?

click me!