அதிமுக அலுவலகத்தில் கலவரம் செய்தவர்கள் இவர்கள் தான்... அடையாளம் கண்ட சிபிசிஐடி!!

Published : Sep 12, 2022, 08:47 PM IST
அதிமுக அலுவலகத்தில் கலவரம் செய்தவர்கள் இவர்கள் தான்... அடையாளம் கண்ட சிபிசிஐடி!!

சுருக்கம்

அதிமுக அலுவலக கலவரம் தொடர்பாக இதுவரை 100 நபர்களின்  அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. 

அதிமுக அலுவலக கலவரம் தொடர்பாக இதுவரை 100 நபர்களின்  அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, வானகரத்தில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள், எடப்பாடி கே.பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியது. இதில் 47 போ் காயமடைந்ததுடன் பேருந்து, காா், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அதிமுக அலுவலகத்துக்கு சீல வைக்கப்பட்டது. பின்னா், நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த மாதம் 21 ஆம் தேதி சீல் அகற்றப்பட்டு, அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: ராஜேந்திர பாலாஜி தமிழகத்தை விட்டு வெளியே செல்ல தடை... உச்சநீதிமன்றம் அதிரடி!!

அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓ.பி.எஸ். ஆவணங்களை எடுத்து சென்றுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறையில் புகார் அளித்தார். பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த  முறை விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலக மோதல், கலவரம், ஆவணங்கள், சொத்துகள் சூறை தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான நான்கு வழக்குகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மதுப்பிரியர்கள் ஷாக்.!! தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை? நீதிமன்றம் சொன்ன பரபரப்பு கருத்து !!

இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் மற்றும் கை ரேகை நிபுணர்கள், பொதுப்பணி துறை அதிகாரிகள் கடந்த 7 ஆம் தேதி  அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் இன்று அதிமுக  கலவரம் வழக்கில் சிபிசிஐடி  போலீசார் அடுத்த கட்டமாக கலவரம் நடைபெற்ற நாளில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு வருகின்றனர். தற்போது வரை 100 நபர்கள் வரை அடையாளம் கண்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அடுத்த கட்டமாக கலவரத்தில் தொடர்பு உடையவர்களை நேரில் அழைத்து விசாரிக்க சம்மன் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!