அந்த 10 ரூபாய் மிச்சம்... இனி டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பில்! களமிறங்கும் ரயில்டெல்!

Published : Jun 27, 2023, 12:03 AM ISTUpdated : Jun 27, 2023, 12:09 AM IST
அந்த 10 ரூபாய் மிச்சம்... இனி டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பில்! களமிறங்கும் ரயில்டெல்!

சுருக்கம்

டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுவுக்கு பில் வழங்கப்போவதாக வெளியான அறிவிப்பு குடிகார ஆசாமிகளை குஷிப்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாட்டில் அரசு மதுமான விற்பனை நிறுவனமான டாஸ்மாக் மதுபான விற்பனையை டிஜிட்டல் மயமாக்கி கம்ப்யூட்டர் பில் வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளது. இதனால், விரைவில் தமிழகத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் மதுபானம் வாங்குபவர்களுக்கு பில் வழங்கப்படும்.

இது தொடர்பாக பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல்லுக்கு (RailTel) டாஸ்மாக் நிறுவனம் ரூ.294 கோடி மதிப்பிலான ஆர்டரை வழங்கியுள்ளது. இதைப் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக்கின் செயல்பாடுகளை முழுவதும் கணினிமயமாக்கவும், ரசீது வழங்கவும் ஒருங்கிணைந்த தீர்வை உருவாக்கித் தருவதற்கான ஆர்டரைப் பெற்றுள்ளதாக ரயில்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

போதை பழக்கத்திற்கு நீங்கள் அடிமையாக கூடாது.. மாணவர்களுக்கு அறிவுரை சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்.!!

இந்த டிஜிட்டல் மயமாக்கும் பணியை ஐந்தாண்டுகளுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் 
ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் மதுபான இருப்பைக் கணக்கு வைக்க டிஜிட்டல் முறையைக் கொண்டுவரும் திட்டத்தை தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இப்போது, சில்லறை விற்பனை நிலையங்கள் வரை டாஸ்மாக் நிறுவனத்தின்  அனைத்து செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்பட உள்ளன. முதன்மையாக இதன் மூலம் கள்ளச் சாராயச் சந்தையைக் கட்டுப்படுத்த முடியும் என்று டாஸ்மாக் நிர்வாகம் கருதுகிறது. ஜனவரியில் மாதமே இதற்கான தொழில்நுட்ப தீர்வுக்கான டெண்டர் கோரப்பட்டது. இப்போது ரெயில்டெல் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு ரூ.4,079 கோடி வழங்கும் மத்திய அரசு! 16 மாநிலங்களுக்கு ரூ.56,415 கோடி அறிவிப்பு

அண்மைக் காலமாக டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்குவோரிடம் 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதலாக பணம் வசூலிக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இப்போது டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுவுக்கு பில் கிடைக்கும் என்ற அறிவிப்பு மது பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மது ஒழிப்பு துறையின் புதிய அமைச்சராக அறிவிக்கப்பட்ட முத்துசாமி, டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்று எச்சரித்துள்ளார். அமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பால் போதை ஆசாமிகள் புத்துணர்ச்சி அடைந்துள்ளனர். பில் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அவர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது.

வெறும் கையால் மனிதக் கழிவுகளைச் சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்கள்! மதுரை ரயில் நிலையத்தில் அவலம்!

PREV
click me!

Recommended Stories

2.30 மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்ட பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி..!
Tamil News Live today 16 January 2026: 2.30 மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்ட பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி..!