ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிசிஐடி சிறப்பான புலனாய்வு செய்து வருவதால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். யார் யாரெல்லாம் இதில் சம்மந்தப்பட்டுள்ளனரோ அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதே அரசின் நோக்கம்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிசிஐடி சிறப்பான புலனாய்வு செய்து வருவதால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கடந்த ஜூலை 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தற்போது வரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கைது செய்யப்பட்டவர்களில் திமுக, அதிமுக, பாஜக, தமாகா என பல்வேறு கட்சியினரும் அடங்குவர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக கருவருக்க காத்திருக்கும் கும்பல்.. யார் இந்த பாம் சரவணன்? உளவுத்துறை அலர்ட்டால் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரும், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளும் கருதுகிறார்கள். எனவே உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களது சந்தேகத்தைப் போக்குவது இந்த அரசின் கடமை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிசிஐடி சிறப்பான புலனாய்வு செய்து வருவதால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். யார் யாரெல்லாம் இதில் சம்மந்தப்பட்டுள்ளனரோ அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதே அரசின் நோக்கம்.
இதையும் படிங்க: Sambo Senthil : யார் இந்த சம்போ செந்தில்.! ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு ஏற்பட்டது எப்படி.?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை. சதி செயலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் புலனாய்வின் அடிப்படையில் கைது செய்துள்ளோம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என்று எடப்பாடி பழனிசாமி கூறட்டும் என காட்டமாக கூறினார்.