சென்னை புழல் சிறையில் தண்டனை பெற்று வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமும் பணம் பெற்ற நிலையில், அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்த நிலையில் செந்தில் பாலாஜி திமுக.வில் ஐக்கியமானார்.
undefined
இதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து முக்கிய துறைகளில் ஒன்றான மின்வாரியத்தின் அமைச்சராக பொறுப்பேற்றார். இனிடையே செந்தில் பாலாஜிக்கும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான வார்த்தைப்போர் நாளுக்கு நாள் முற்றி பெரிதடைந்தது.
நாளை முதல் தென்மாவட்ட ரயில்கள் சென்னைக்குள் நுழைய தடை; ரயில் சேவையில் முக்கிய மாற்றங்கள்
இந்நிலையில் திடீரென போக்குவரத்து துறையில் நடைபெற்ற ஊழல் வழக்குக்காக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக செந்தில் பாலாஜி கூறியதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிகிச்சைக்கு பின்னர் அவர் சென்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஓராண்டு காலத்திற்கும் மேலாக சிறையில் தண்டனை பெற்று வரும் செந்தில் பாலாஜி தனது உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டபோதும் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வருகிறது. சிறிது காலம் எந்தவித பொறுப்பிலும் இல்லாமல் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்தார். பின்னர் அமைச்சர் பதவியையும் அவர் நிராகரித்தார்.
Annamalai: அண்ணாமலைக்கு ரபேல் வாட்சை பரிசளித்ததே இவர்தான்; புதிய தகவலை வெளியிட்ட கல்யாணராமன்!!
இந்நிலையில் புழல் சிறையில் செந்தில் பாலாஜிக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த அதிகாரிகள் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்தனர். அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி ஆம்புலன்ஸ் மூலம் ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.