பயமின்றி அரசியல் செய்வது எப்படி? பிரதமர் மோடியைப் பார்த்து கத்துக்கோங்க!: ஸ்டாலினுக்கு அண்ணாமலை அட்வைஸ்

Published : Jun 18, 2023, 12:02 AM IST
பயமின்றி அரசியல் செய்வது எப்படி? பிரதமர் மோடியைப் பார்த்து கத்துக்கோங்க!: ஸ்டாலினுக்கு அண்ணாமலை அட்வைஸ்

சுருக்கம்

பிரதமர் மோடியைப் பார்த்து பயமில்லாமல் அரசியல் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் நாடு முழுவதும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற 9 ஆண்டு சாதனை விளக்கக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு பேசினர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "இன்று தமிழக சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 4 எம்.எல்.ஏக்கள்தான் இருக்கிறார்கள். இது நாளை 150ஆக அதிகரிக்கும். உழைப்புதான் எங்கள் நம்பிக்கை" என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினையும் விமர்சித்துப் பேசினார்.

வலுக்கும் எதிர்ப்பு, வழக்கை வாபஸ் பெறுவது எப்போது? ஏசியாநெட் நிருபர் கைதுக்கு பிரபலங்கள் கண்டனம்

பயமின்றி அரசியல் செய்வது எப்படி என்பதை முதல்வர் மு. க. ஸ்டாலின் பிரதமர் மோடியைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். முதல்வர் ஸ்டாலின் திமுக யாரையும் கண்டு பயப்படாது என்று சொல்கிறார். ஆனால் எமர்ஜென்சி காலத்தின்போது அவர்கள் ஓடி ஒளிந்துகொண்டனர் என்றும் அண்ணாமலை சாடினார்.

பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா சர்ச்சை ட்வீட் காரணமாக போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதையும் அண்ணாமலை தன் பேச்சில் கண்டித்தார். "தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். ஆனால், சமூக வலைத்தளத்தில் உண்மையைப் பதிவிட்ட எஸ். ஜி. சூர்யாவை கைது செய்திருக்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

காங்கிரஸில் சேர்வதை விட கிணற்றில் குதித்துவிடலாம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

அமலாக்கத்துறையின் காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்  இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரியதை விமர்சித்த அண்ணாமைல, "தனியார் மருத்துவமனையில் தான் உயர்தரமான சிகிச்சை கிடைக்கும் என்றால் ஏழை மக்களையும் அங்கேயே அனுப்பி வையுங்கள்" என்று கூறினார்.

3,000 ஆண்டுகள் பழமையான மம்மி! பெரு நாட்டில் திகிலூட்டும் கண்டெடுப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! அலறி துடித்த பயணிகளின் நிலை என்ன?