மீண்டும் டாஸ்மாக் மரணம்! திருச்சியில் மது அருந்திய நண்பர்கள் இருவர் சாவு

By SG Balan  |  First Published Jun 17, 2023, 7:14 PM IST

சிவகுமார், முனியாண்டி இருவரும் டாஸ்மாக் மது அருந்தி உயிரிழந்தது குறித்து திருச்சி மாவட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தஞ்சை, மயிலாடுதுறையைத் தொடர்ந்து திருச்சியில் டாஸ்மாக் மதுவை வாங்கிக் குடித்த இரண்டு பேர் உயிரிழந்திருப்பது  தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை குறித்த சர்ச்சையை அதிகமாக்கியுள்ளது.

திருச்சி மாவட்டம் தச்சங்குறிச்சியைச் சேர்ந்த நண்பர்கள் சிவகுமார், முனியாண்டி. இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை மதியம் தச்சங்குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளனர் என்று தெரிகிறது. மது அருந்தியதும் வீடு திரும்பியதும் இருவருக்கும் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

இதனால் இருவரும் தச்சங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காததால் இருவரும் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். முனியாண்டி அங்கு அனுமதிக்கப்பட்டு இரவு முழுவதும் குளுகோஸ் ஏற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வலுக்கும் எதிர்ப்பு, வழக்கை வாபஸ் பெறுவது எப்போது? ஏசியாநெட் நிருபர் கைதுக்கு பிரபலங்கள் கண்டனம்

சிவகுமார் சிகிச்சை பெற்றதும் வீட்டிற்குச் சென்ற நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்ததாக தெரியவந்தது. இதனிடையே, லால்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முனியாண்டியும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, உயிரிழந்துவிட்டார்.

முனியாண்டியின் மகன் மணிராஜ் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், சிவகுமார், முனியாண்டி இருவரும் உயிரிழந்தது குறித்து திருச்சி மாவட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் தோழி முன்பாக ஹீரோயிசம் காட்டச்சென்ற இளைஞர்கள் முகம் சிதைந்து உயிரிழந்த பரிதாபம்

click me!