ஆலங்குடி மகாஜனம் கிராமத்துக்கு பேருந்து இயக்க நடவடிக்கை எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஊர் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
நடப்பாண்டு காவிரிப் பாசனம் நடைபெறும் 12 மாவட்டங்களில் தூர்வாரும் பணிக்காக தமிழக அரசு ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. கடந்த ஏப்ரல் 27-ம் தேதி தூர்வாரும் பணிகள் தொடங்கின. மேட்டூர் அணையிலிருந்து வரும் 12-ம் தேதி பாசனத்துக்காக தண்ணீர்திறக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூர் வந்தார். அங்குள்ள சுற்றுலா மாளிகையில் தங்கிய முதல்வர், நீர்வள ஆதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
undefined
இதையும் படிங்க..தமிழ்நாட்டுக்கு பாஜக என்ன செஞ்சது.? லிஸ்ட் போட்டு பார்க்கலாமா.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, ஆலக்குடியில் முதலைமுத்து வாரியில் ரூ.20 லட்சத்தில் நடைபெற்ற தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டார். மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் தொடர்பான புகைப்படங்களைப் பார்வையிட்டார். ஆலங்குடி மகாஜனம் அருகே காரை நிறுத்திய முதல்வர் அப்பகுதியில் நூறு நாள் வேலையில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதில் ஆலங்குடி மகாஜனம் கிராமத்திற்கு உரிய நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே, பேருந்து வசதி செய்து தருமாறு பொதுமக்கள் நேரடியாக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர்.
முதல்வரின் அதிரடி உத்தரவின் பேரில் காலை 8:00 மணி மற்றும் மாலை 5:30 மணிக்கு லால்குடியில் இருந்து ஆலங்குடி மகாஜனத்திற்கும், காலை 8:35 மணி மற்றும் மாலை 6:05 மணிக்கு ஆலங்குடி மகாஜனத்தில் இருந்து லால்குடிக்கும் என 4 நடைகள் பேருந்து இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அறிவித்தார்.
அதன்படி, இன்று காலை ஆலங்குடி மகாஜனத்தில் இருந்து செம்பரை, காட்டூர் வழித்தடத்தில் லால்குடிக்கு 88P என்ற எண்ணுடைய நகரப் பேருந்து இயக்கப்பட்டது. அப்பகுதி பெண்கள் மற்றும் அனைவரும் பேருந்துக்குள் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க..கோடை வெயிலுக்கு குளு குளு காற்று வேணுமா.. கூலிங்கான கேட்ஜெட்ஸ் பற்றி தெரியுமா உங்களுக்கு?