பாஜகவை ஆச்சரியப்படுத்திய திமுக அரசு.! இத்தனை ஆயிரம் கோடி கோயில் நிலங்கள் மீட்பா.? வெளியான பட்டியல்

Published : Jan 31, 2025, 02:57 PM IST
பாஜகவை ஆச்சரியப்படுத்திய திமுக அரசு.! இத்தனை ஆயிரம் கோடி கோயில் நிலங்கள் மீட்பா.? வெளியான பட்டியல்

சுருக்கம்

தமிழகத்தில் 2,392 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. 7,400 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு, 12,202 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடுதல் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு, மக்கள் மகிழ்ச்சியுடன் வழிபடுகின்றனர்.

தமிழக அரசின் ஆன்மிக திட்டங்கள்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக கோயில் உள்ள இடமாக உள்ளது. எனவே தமிழக அறநிலையத்துறை சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக குடமுழக்கு, அன்னதான திட்டம், காசி- ராமேஸ்வரத்திற்கு இலவச ஆன்மிக சுற்றுலா, அறுபடை வீடு சுற்றுலா, ஆடி மாதம் அம்மன் கோயில் சுற்றுலா என் பல ஆன்மிக பக்தர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் கோயில் நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலங்களை மீட்க தமிழக அறநிலையத்துறை தீவிர நடவடிக்கை எடுத்தது. இதன் படி சுமார் 7ஆயிரம் கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 

திருப்பதிக்கே டஃப் கொடுக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் உண்டியல் காணிக்கை! கோவிந்த கோடிகள்! வியந்த பக்தர்கள்!

திமுக அரசின் ஆன்மிக திட்டங்கள்

இது தொடர்பாக  இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள தகவலில், தமிழ் நாட்டில் மதச்சார்பின்மையை கடைபிடித்து சமய நல்லிணக்கத்தை ஆதரிக்கும் அரசாக விளங்குகிறது. மேலும் மக்களின் சமய நம்பிக்கைகளுக்கு உரிய மதிப்பளித்து திருப்பணிகளை சிரத்தையுடன் மேற்கொண்டு வருகிறது. திராவிட மாடல் அரசு மக்களின் சமய உணர்வுகளை மதித்து இறை வழிபாட்டுத்தலங்களை மேலும் வளப்படுத்திவதில் பெரும் அக்கறையோடு செயல்படும் அரசு என்பதற்கு இந்து சமய அற நிலையத் துறையின் சிறப்பான செயல்பாடுகள் சான்றாகியுள்ளன.

7,132 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தற்போதுவரை 2,392 திருக்கோவில்களில் திருப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்குகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 7132 கோடி ரூபாய் மதிப்புள்ள 7,400 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, 12202 திருக்கோவில்களில் 5,515 கோடி ரூபாய் செலவில் 23234 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

நான் எதுக்கு பதில் சொல்லணும்? - கோபமான முதல்வர் ஸ்டாலின்

கோயில்களில் திருப்பணிகள்

திருத்தலங்களின் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக, 1,770 கோடி ரூபாய் செலவில் 19 கோவில் வளாகங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில்முதலமைச்சரின் வழிக்காட்டுதல்களால் திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் உள்ளம் அறிந்து செயல்படும் முதலமைச்சரின் நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சியோடு திருக்கோவில்களில் வழிபட்டு வருகிறார்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு! ரூ.48,000 உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி?
Egg Price: இனி ஆம்லேட், ஆஃபாயிலை மறந்துட வேண்டியதுதான்.! கோழி முட்டை விலை புதிய உச்சம்.!