சென்னை திருவல்லிக்கேணியில் குத்துச்சண்டை வீரர் தனுஷ், முன்விரோதம் காரணமாக கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 9 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி, தலையை இரண்டாகப் பிளந்தது.
சென்னை திருவல்லிக்கேணி கிருஷ்ணாம்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜேஷ் - ராதா ஆகியோரின் தம்பதியின் மகன் தனுஷ்(24). இவர் குத்துச்சண்டை போட்டிகளில் தமிழகம் சார்பில் பங்கேற்று பல்வேறு பதக்கம் வென்றுள்ளார். ஜிம்மில் டிரெய்கராக இருந்து கொண்டே காவல்துறை தேர்வுக்கும் தயராகி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் அருகே இளைஞர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தனுஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆகையால் காவல்துறை தேர்வுக்குத் தயாராக முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் அருகே தனுஷ் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 9 பேர் கொண்ட கும்பல் தனுஷை தாக்க முயன்றனர். அவர்களை முதலில் தடுத்த குத்துச்சண்டை வீரர் தனுஷ் ஒருகட்டத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் அங்கிருந்து உயிர் பயத்தில் ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் ஓட ஒட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். ஆத்திரம் தீராமல் தனுஷின் தலையை இரண்டாக பிளந்தனர். இந்த சம்பவத்தை தடுக்க வந்த அவரது நண்பர் அருணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியது.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! எச்சரிக்கையுடன் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
உடனே சம்பவ இடத்துக்கு வந்த ஐஸ் ஹவுஸ் போலீஸார் தனுஷின் உடலை கைப் பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த அருண் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றது தெரியவந்தது. இந்நிலையில், இக்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மோகன், செந்தில், டேவிட், விஷால் உள்ளிட்ட ஒன்பது பேரை ஐஸ் ஹவுஸ் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: சிரிச்சது ஒரு கூத்தமா? கல்லூரி மாணவிக்கு கட்டி பிடித்து முத்தம் கொடுத்த இளைஞர்! நடந்தது என்ன?
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தனுஷ்க்கும் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 3ம் தேதி, கிருஷ்ணாம்பேட்டை மயானபூமி எதிரே அய்யப்பன் என்பவரது இறுதிச்சடங்கில், கானா பாடல் பாடிய மோகனை, தனுஷ், அவரது தந்தையுடன் சேர்ந்து அடித்துள்ளார். இதுதொடர்பாக மோகன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன் மோகனை அழைத்துப் பேசிய தனுஷ் வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரடடைந்த மோகன், அவரது நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு தனுஷை கொலை செய்தது தெரியவந்துள்ளது.