பெரியாரை மரியாதை குறைவாக பேசியவருக்கு எல்லாம் நான் மரியாதை கொடுக்க முடியாது - சீறும் ஸ்டாலின்

Published : Jan 31, 2025, 01:25 PM ISTUpdated : Jan 31, 2025, 02:16 PM IST
பெரியாரை மரியாதை குறைவாக பேசியவருக்கு எல்லாம் நான் மரியாதை கொடுக்க முடியாது - சீறும் ஸ்டாலின்

சுருக்கம்

ஆளுநர் எல்லா பிரச்சினையிலும் அரசுக்கு எதிராக செயல்படுகிறார் அது எங்களுக்கு நல்லது தான் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஆய்வு

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த வகையில் கொளத்தூர், பாடி மேம்பாலம் அருகில் - வண்ண மீன்கள் விற்பனை மையம், திரு.வி.க. நகர் - கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம் பணிகள்மேலும் கன்னிகாபுரம் பகுதியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ரூ.44.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் மற்றும் TNUHDB குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,சென்னை மாநகராட்சி மேயராக இருந்த போதும், தொடர்ந்து துணை முதலமைச்சர் ஆக இருந்த போதும் சென்னைக்கு பல்வேறு பணிகளை செய்துள்ளோம். 

 வட சென்னையில் திட்டங்கள்

சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் மட்டுமின்றி  10 மேம்பாலங்கள் எங்கு எல்லாம் போக்குவரத்து நெரிசல் இருக்கிறதோ அங்கெல்லாம்  கட்டியிருக்கிறோம். அது மிகப்பெரிய சாதனையாக நினைக்கிறோம். சென்னை சிங்கார சென்னையாக மாற வேண்டும் என பல்வேறு பணிகள் செய்தோம் .வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகளை நான் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன் 

ஆளுநரின் செயல்பாடு திமுக ஆட்சிக்கு சிறப்பு சேர்க்கிறது

வடசென்னை வளர்ந்த சென்னையாக ஓராண்டு காலத்திற்குள் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆளுநர் எல்லா பிரச்சினையிலும் அரசுக்கு எதிராக செயல்படுகிறார் அது எங்களுக்கு நல்லது தான் தொடர்ந்து ஆளுநர் இதை செய்ய வேண்டும் ஆளுநர் இவ்வாறு செயல்பட செயல்பட எங்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் வேகம் வருகிறது. ஆளுநரின் செயல்பாடு திமுக ஆட்சிக்கு சிறப்பு சேர்க்கிறது. துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் முடிவு தொடர்பாக  தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. பெரியார் மீது மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு எல்லாம் நான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை.

மாரியாதை கொடுக்க முடியாது

பெரியார் தான் எங்களுடைய தலைவர். தலைவர்களுக்கெல்லாம் தலைவர் பெரியார். பெரியார் நீண்ட விமர்சனத்தை பொருள்படுத்த தயாராக இல்லை. சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு அங்கொன்று இங்கொன்றுமாக சில தவறுகள் நடைபெறுவதை பெரிதாக்கி பூதாகரமாக்கி எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள் இதைப் பற்றி கவலைப்படவில்லை சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சிறப்பாக இருக்கிறது வெளிமாநிலங்களில் இருந்து தொழிற்சாலைகள் தொடர்ந்து தமிழகத்திற்கு வந்து கொண்டு தான் இருக்கிறது.
 

PREV
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!