
பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில்களில் கடைசியாக உள்ள பெண்களுக்கான பெட்டியை நடுப்பகுதியில் வைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. புறநகர் மற்றும் நீண்ட தூர ரயில்களில் இந்த மாற்றம் செய்யப்படும்.
அண்மைக்காலமாக நீண்ட தூரம் செல்லும் ரயில்களில்இ பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகள், கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞர் ஒருவர் ஓடும் ரயிலில் சிறுமி ஒருவரை பாலிய்ல வன்கொடுமை செய்ய முயன்றார்.
இது போன்ற சம்பவங்களால் ரயிலில் கடைசியாக பொருத்தப்பட்டுள்ள பெண்கள் பெட்டியை நடுப்பகுதிக்கு மாற்ற ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டை பெண்கள் பாதுகாப்பு ஆண்டாக, ரயில்வே கடைபிடித்து வருவதையொட்டி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், பெண்கள் பெட்டியை எளிதில் அடையாளம் காண அதற்கு தனி வண்ணம் பூசவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இளஞ்சிவப்பு நிறம் பூச பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், பெண்கள் பெட்டியில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், ஜன்னல்கள் வழியாக சமூக விரோதிகள் நுழைவதை தடுக்க ஜன்னல்களில் கம்பி வலை பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், பெண்கள் பெட்டிக்கு வரும் டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் ஆகியோரில் பெண்களும் இடம்பெறுவார்கள். ரயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் பெண்களுக்கென தனி கழிப்பறைகள், உடை மாற்றும் அறைகள் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.