பாலூட்டும் தாய்மார்களுக்கு குட் நியூஸ் சொன்ன மெட்ரோ நிர்வாகம் !!

By Raghupati R  |  First Published Apr 1, 2023, 7:40 AM IST

தமிழகம் முழுவதும் அமைந்துள்ள பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகளை ஏற்கனவே திறந்துவைத்திருந்தார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.


பாலூட்டும்  தாய்மார்கள் பணி மற்றும் பயணம் நிமித்தமாக வெளியே செல்லும் போது பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டியுள்ளது. 

எனவே, பேருந்து  நிலையங்களில் காத்திருக்கும் வேளைகளில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வித இடையூறுமின்றி தனிமையில் வசதியாக பாலூட்டும் வகையில்  அரசு பேருந்து முனையங்கள், நகராட்சி மற்றும் நகர பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து பணிமனைகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள்  ஆகியவற்றில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் அமைக்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..60 பவுன் கிடையாது.. மொத்தம் 200 பவுன் காணோம்..! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வழக்கில் புது ட்விஸ்ட்

undefined

அதன்படி, தமிழகம் முழுவதும் அமைந்துள்ள பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகளை திறந்துவைத்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்த நிலையில், பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறைகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம். ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ, வடபழனி மெட்ரோ, எழும்பூர் மெட்ரோ, புரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்களில் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பாலூட்டும் தாய்மார்களின் வேண்டுகோளுக்கு இணங்க தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை திறக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இந்த முயற்சி தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு பயண அனுபவத்தை மிகவும் இனிமையானதாக்கும்.

பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறைகள் இன்று (மார்ச் 31) புரட்சித்தலைவர் டாக்டர் எம். ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ, வடபழனி மெட்ரோ, எழும்பூர் மெட்ரோ, புரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்களில் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறைகள் ஏற்கெனவே விமான நிலைய மற்றும் விம்கோ நகர் மெட்ரோ நிலையத்தில் தாய்மார்களின் பயன்பாட்டிற்காக உள்ளது.

மெட்ரோ ரயில் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. பாலூட்டும் தாய்மார்கள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ

இதையும் படிங்க..Swiggyல் 6 லட்சத்துக்கு இட்லி வாங்கிய நபர்.. சென்னையில் இட்லிக்கு பேமஸ் ஆன ஹோட்டல் எது தெரியுமா.?

click me!