காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி - கோபிச்செட்டி பாளையத்தில் பரபரப்பு

 
Published : May 27, 2017, 08:56 AM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி - கோபிச்செட்டி பாளையத்தில் பரபரப்பு

சுருக்கம்

labour dead due elephant attack at gopichettipalayam forest

ஈரோடு மாவட்டம் துக்கநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதி சூரியக்காட்டுக்குட்டை. பழங்குடியினத்தவர்கள்  வசிக்கும் இக்கிராமம் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் இருக்கிறது.

இந்நிலையில் இக்கிராமத்தைச் சேர்ந்த காளியப்பன் என்ற தொழிலாளி நேற்றிரவு பணி முடித்து விட்டு தனது கிராமத்திற்குச் செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலையின் ஓரம் யானை ஒன்று காளியப்பனை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த வனத்துறை மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த காளியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உயிரிழந்த காளியப்பனின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யானை தாக்கியதில் தொழிலாளி பலியான சம்பவம் கோபிச்செட்டிபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!