
நாகப்பட்டினம்
ஆதிதிராவிடர்கள் பயன்படுத்தும் சுடுகாட்டுப் பாதையில் தடுப்புச் சுவர் அமைப்பதை கைவிடக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம் மாவட்டம், மருதூர் பூவன்வாடு பகுதியில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் சுடுகாட்டிற்குச் செல்ல ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த பாதையை அடைக்க சில தீண்டாமை எண்ணம் படைத்த அரக்கர்கள் தடுப்பு சுவர் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதைத் தடுத்து நிறுத்தக்கோரி நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மருதூர் கடைத் தெருவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்தச் சாலைமறியல் குறித்து தகவல் அறிந்த வாய்மேடு காவலாளர்கள் மற்றும் வருவாய்துறையினர் போரட்டத்தில் ஈடுபட்ட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சு வார்த்தையில் நான்கு மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். நான்கு மாதம் வரை சுடுகாட்டுப் பாதையில் தடுப்புச் சுவர் கட்டிவிட்டால் என்ன செய்வது? அதுவரை நாங்கள் அந்த பாதையை பயன்படுத்தக் கூடாதா என்று கேள்வி கேட்டனர்.
அவ்வாறு நடக்காமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணைச் செயலாளர் நாராயணன், கிளைச் செயலாளர் முருகையன், மாவட்ட நிர்வாக குழுவைச் சேர்ந்த நாகராஜன் உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்தச் சாலை மறியல் போராட்டம் காரணமாக வாய்மேடு - வேதாரண்யம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.