தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பை நடிகை குஷ்பு ராஜினாமா செய்துள்ளார். அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடிகையும், அரசியல் பிரமுகருமான குஷ்பு 2010ம் ஆண்டு காலகட்டத்தில் திமுக.வில் இணைந்து தனது அரசியல் பயணத்தைதத் தொடங்கினார். பின்னர் 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். அதன் பின்னர் 2020ம் ஆண்டு பாஜக.வில் இணைந்து தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
இன்னமுமா இந்த உலகம் இதை நம்புது? உலகம் முழுவதும் நம்பப்படும் மூடநம்பிக்கைகள்
undefined
அதன் பின்னர் குஷ்புவிற்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஆனால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பேசுபொருளானார். இந்நிலையில் குஷ்பு தான் வகித்து வந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பை தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
அயோத்தியில் ராமருக்கு சிலை வடித்தவரின் விசாரவை நிராகரித்த அமெரிக்கா; அதிர்ச்சியில் யோகி
முன்னதாக கடந்த ஜூன் 28ம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ளார். இந்நிலையில் தற்போது குஷ்புவின் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு நேர அரசியலில் பயணிப்பதற்காக மகளிர் ஆணையத்தில் இருந்து விலகி உள்ளேன். இதுநாள வரை கட்சி விழாக்களில் கலந்து கொள்ள முடியாத நிலையில், இனி முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என விளக்கம் அளித்துள்ளார்.