
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கும்பகோணம் மாநகராட்சியை எந்தக் கட்சி கைப்பற்றி வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள், பட்டுக் கோட்டை, அதிராம் பட்டினம் என 2 நகராட்சிகள், வல்லம், மதுக்கூர், திருவையாறு, ஒரத்தநாடு, பேராவூரணி, சுவாமிமலை இ பெருமகளூர் உள்ளிட்ட 20 பேரூராட்சிகள் இருக்கிறது. தமிழகத்தில் ஒரே மாவட்டத்தில் 2 மாநகராட்சியை பெற்றுள்ள சிறப்பை தஞ்சை மாவட்டம் பிடித்துள்ளது. அதாவது மற்ற மாவட்டங்களில் ஒரே மாநகராட்சி மட்டும் உள்ளது. சில மாவட்டங்களில் நகராட்சி மட்டுமே உள்ளது. அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சி உள்ளதால் 2 மேயர் பதவி கிடைக்க உள்ளது. இதனால் 2 மேயர் பதவிகளை பிடித்து வரலாற்று சிறப்பு மிக்க இடத்தை பிடிக்க தி.மு.க., அ.தி.மு.க., இடையே போட்டோ போட்டி நிலவுகிறது. இந்த களத்தில் பா.ஜ.க, அ.ம.மு.க, பா.ம.க, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க போன்ற கட்சியினரும் தனித்து போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற பல்வேறு யூகங்களை வகுத்து வருகின்றனர். இதனால் ஒரே மாவட்டத்தில் 2 மேயர் பதவியை ஒரே கட்சி கைப்பற்றுமா அல்லது 2 கட்சிகள் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு தஞ்சை மாவட்டம் மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. தமிழகமே உற்று கவனித்து வரும் மாவட்டமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டு, கும்பகோணம் மாநகராட்சியில் 48 வார்டு என மொத்தம் 99 வார்டுகள் உள்ளன. திமுக 37, அதிமுக 3, இந்திய தேசிய காங்கிரஸை 2, இந்திய கம்யூ. கட்சி (மார்க்.) 1, சுயேட்சை 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது அதுக்குறித்த முழுவிவரத்தை காண்போம்.
கும்பகோணம் மாநகராட்சியில் திமுக வேட்பாளர்கள் வெற்றி:
1வது வார்டில் திமுகவை சேர்ந்த ஆசைத்தம்பி, 2வது வார்டில் திமுகவை சேர்ந்த செ.ராஜேஸ்வரி, 3வது வார்டில் திமுகவை சேர்ந்த ஏ.ஹத்திஜா பீவி, 5வது வார்டில் திமுகவை சேர்ந்த சக்கரபாணி, 6வது வார்டில் திமுகவை சேர்ந்த பார்திபன், 9வது வார்டில் திமுகவை சேர்ந்த தமிழ்செல்வி, 10வது வார்டில் திமுகவை சேர்ந்த ஜெ.நடராஜன், 11வது வார்டில் திமுகவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 12வது வார்டில் திமுகவை சேர்ந்த ஆர்.சந்தோஷ்குமார், 13வது வார்டில் திமுகவை சேர்ந்த ஆர்.செல்வராஜ், 15வது வார்டில் திமுகவை சேர்ந்த ஜி தீபா, 16வது வார்டில் திமுகவை சேர்ந்த ஆர்.பாலாஜி, 18வது வார்டில் திமுகவை சேர்ந்த அ.வர்ஷா, 20வது வார்டில் திமுகவை சேர்ந்த பி.ஞானபண்டிதன், 21வது வார்டில் திமுகவை சேர்ந்த கா.சுமதி, 22வது வார்டில் திமுகவை சேர்ந்த ஜெ.மனோகரன், 23வது வார்டில் திமுகவை சேர்ந்த ச.பிரதீபா, 25வது வார்டில் திமுகவை சேர்ந்த ஆர்.தெட்சிணாமூர்த்தி, 26வது வார்டில் திமுகவை சேர்ந்த சு.ப.தமிழழகன், 28வது வார்டில் திமுகவை சேர்ந்த மா.சத்யா, 29வது வார்டில் திமுகவை சேர்ந்த சி.சிவரஞ்சனி, 30வது வார்டில் திமுகவை சேர்ந்த ரா.முருகன், 31வது வார்டில் திமுகவை சேர்ந்த இரா.அசோக்குமார், 32வது வார்டில் திமுகவை சேர்ந்த அ.சாகுல் அமீது, 36வது வார்டில் திமுகவை சேர்ந்த சு.அசோக்ராஜ், 37வது வார்டில் திமுகவை சேர்ந்த டி.ஆர்.அனந்தராமன், 38வது வார்டில் திமுகவை சேர்ந்த ந.சரவணன், 39வது வார்டில் திமுகவை சேர்ந்த இரா.நரசிம்மன், 40வது வார்டில் திமுகவை சேர்ந்த பா.ப்ரித்தி, 41வது வார்டில் திமுகவை சேர்ந்த வீ.கீதப்பிரியா, 42வது வார்டில் திமுகவை சேர்ந்த அ.செல்வி, 43வது வார்டில் திமுகவை சேர்ந்த வெ.பிரியங்கா, 44வது வார்டில் திமுகவை சேர்ந்த சீ.தேவி, 45வது வார்டில் திமுகவை சேர்ந்த ப.திவ்யபாரதி, 46வது வார்டில் திமுகவை சேர்ந்த சி.ரஞ்சிதா, 47வது வார்டில் திமுகவை சேர்ந்த கா.சினேகா, 48வது வார்டில் திமுகவை சேர்ந்த க.ஜெயரதி கண்ணன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
அதிமுக வேட்பாளர்கள் வெற்றி:
19வது வார்டில் அதிமுகவை சேர்ந்த ஆர்.ஆதிலெட்சுமி, 33வது வார்டில் அதிமுகவை சேர்ந்த வா.கௌசல்யா, 35வது வார்டில் அதிமுகவை சேர்ந்த ப.குமரேசன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்திய தேசிய காங். வேட்பாளர்கள் வெற்றி:
14வது வார்டில் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த ச.அய்யப்பன், 17வது வார்டில் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த கே.சரவணன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளர் வெற்றி:
34வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ஐ சேர்ந்த ஆ.செல்வம் வெற்றி பெற்றுள்ளார்.
சுயேட்சையாக வேட்பாளர்கள் வெற்றி:
4வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட ஷே.பெனாசீர் நிஹார், 7வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட கி.ரமேஷ்குமார், 8வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட க.சரோஜா, 24வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட அ.ரூபின்ஷா, 27வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட லெ.பிருந்தா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதேபோல் தஞ்சை மாநகராட்சியில், திமுக 36, அதிமுக 7, பாஜக 1, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 1, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1, சுயேட்சை 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
திமுக வேட்பாளர்கள் வெற்றி:
1வது வார்டில் சு.செந்தமிழ்செல்வன், 2வது வார்டில் க.அய்யப்பன், 3வது வார்டில் து.சுகந்தி, 4வது வார்டில் இ.சுமதி, 5 வது வார்டில் கே.ரேவதி, 6வது வார்டில் பா.ஆக்னஸ் மேரி, 7வது வார்டில் ச.விஜயபாபு, 8வது வார்டில் சுல்தான் ஜெய்லானி, 9வது வார்டில் ஜி.ஆனந்த், 10வது வார்டில் தி.புண்ணியமூர்த்தி, 11வது வார்டில் எஸ்.பாலசுப்பிரமணியன், 12வது வார்டில் சி.வெங்கடேஷ், 13வது வார்டில் ஜெ.சுகாசினி, 16வது வார்டில் அ.பிரகாஷ், 17வது வார்டில் ச.சந்திரசேகர மேத்தா, 18வது வார்டில் சசிகலா, 19வது வார்டில் எம்.தமிழ்வாணன், 21வது வார்டில் ச.சந்திரலேகா, 22வது வார்டில் வீ.சத்யா, 24வது வார்டில் த.சந்தானகிருஷ்ணன், 26வது வார்டில் அ.கெஜலெட்சுமி, 28வது வார்டில் வீ.செந்தில்குமார், 29வது வார்டில் எ.ஸ்டெல்லா நேசமணி, 32வது வார்டில் தி.லெனின், 37வது வார்டில் ரா.தமிழரசி, 38வது வார்டில் ச.ரம்யா, 39வது வார்டில் ம.உஷா, 40வது வது வார்டில் க.நீலகண்டன், 44வது வார்டில் கோ.சுகந்தா, 45வது வார்டில் சண் இராமநாதன், 46வது வார்டில் க.கலையரசன், 47வது வார்டில் ஜெ சரீப், 48வது வார்டில் ராஜா சர்மிளாதேவி, 49வது வார்டில் பி.டெய்சிராணி, 50வது வார்டில் க.மரகதம், 51வது வார்டில் பூ.அஞ்சுகம் ஆகியோர் வெற்றி பெற்றுளனர்
அதிமுக வேட்பாளர்கள் வெற்றி:
15வது வார்டில் ஏ.காந்திமதி, 20வது வார்டில் என்.சரவணன், 23வது வார்டில் ஜே.வி.கோபால், 25வது வார்டில் ஆர்.தெட்சிணாமூர்த்தி, 30வது வார்டில் யூ.என்.கேசவன், 41வது வார்டில் கே.மணிகண்டன், 42வது வார்டில் சி.கலைவாணி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
பாஜக வேட்பாளர் வெற்றி:
31வது வார்டில் பாஜகவை சேர்ந்த பா.ஜெய்சதீஷ் வெற்றிப்பெற்றுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளர் வெற்றி:
35வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ஐ சேர்ந்த மு.வைஜெயந்திமாலா வெற்றிப்பெற்றுள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி:
27வது வார்டில் கே.அமுதா, 43வது வார்டில் ஹ.ஹைஜாகனி ஆகியோர் வெற்றிப் பெற்றுள்ளனர்.
சுயேட்சை வேட்பாளர் வெற்றி:
14வது வார்டில் சி.பாப்பா, 33வது வார்டில் செ.வனிதா, 34வது வார்டில் சு.செந்தில், 36வது வார்டில் வெ.கண்ணுக்கினியாள் ஆகியோர் சுயேட்சியாக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர்.