யார் ஈரோடு மாநகராட்சியை கைப்பற்றுவது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.தற்போதைய நிலவரப்படி ஈரோட்டில் 20 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.. அதன் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் இதோ உங்களுக்காக..
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஈரோடு மாநகராட்சியை எந்தக் கட்சி கைப்பற்றி வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பவானி, கோபிச்செட்டிபாளையம், சத்தியமங்கலம், புளியம்பட்டி ஆகிய நகராட்சிகளும் 42 பேரூராட்சிகளும் உள்ளன. இங்கு தி.மு.கவினரைவிட அ.தி.மு.கவினரே செல்வாக்கு உள்ளவர்களாக இருக்கின்றனர். தி.மு.க சார்பாக அமைச்சர் முத்துச்சாமி உள்பட சீனியர்கள் பலர் இருந்தாலும் கடந்த பத்து ஆண்டுகளாக நகர்ப்புற, கிராமப்புறங்களில் அ.தி.மு.கவின் உள்ளூர் நிர்வாகிகள் செல்வாக்கை வளர்த்துள்ளனர்.
எனவே, கூட்டணி இல்லாவிட்டாலும் தங்களுக்கு மக்களிடம் இருந்து வாக்குகள் கிடைக்கும் என நம்புகின்றனர். இதனை முறியடிக்கும் வகையில் தி.மு.கவினர் பிரசாரம் மேற்கொண்டாலும் சீட் கிடைக்காதது, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது, உள்கட்சிப் பூசல் எனப் பல்வேறு அதிருப்திகளும் தி.மு.க அணியில் உள்ளன. தவிர, உள்ளூர் தி.மு.கவினர் சிலர் அ.தி.மு.கவின் சீனியர்களுடன் இணக்கமாக இருப்பதும் மைனஸாக பார்க்கப்படுகிறது.
எனவே இந்தமுறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஈரோடு பகுதி வாக்காளர்கள் யாருக்கு ஆதரவு தரப் போகின்றனர் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி ஈரோட்டில் 13 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அவற்றின் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் அறிந்துகொள்ள ஏசியாநெட் தமிழை தொடர்ந்து படியுங்கள்.